பக்கம் எண் :

308

  ஆப தம்மறி வீருளி ராகில னேகதங்
காப தம்மமர்ந் தான்கழல் சேர்தல் கருமமே.       10
1523.



தொல்லையூ ழிப்பெயர் தோன்றிய தோணிபு ரத்திறை
நல்லகேள் வித்தமிழ் ஞானசம் பந்தனல் லார்கண்முன்
அல்லல் தீரவுரை செய்த வனேகதங் காவதம்
சொல்ல நல்லவடை யும்மடை யாசுடு துன்பமே.      11

                      திருச்சிற்றம்பலம்


உழல்கின்றவர் ஆவர். நாம் அடையத்தக்கது ஆகிய சிவபதத்தை அறியும்
அவா உடையீராயின் அனேகதங்காவதத்துள் எழுந்தருளிய சிவபிரான்
திருவடிகளை ஆராய்ந்துணர்தே்ல நீவிர் செய்யத்தக்க கருமம் ஆகும்.

     கு-ரை: மாபதம்-பெரிய பதவி. ஏ பதம்-ஏ ஏ என்னும் இகழ்கின்ற
சொல்; ‘ஏ ஏ இவள் ஒருத்தி பேடியோ என்றார்’ (சீவகசிந்தாமணி. பா. 652.)
அறிவீருளிர்-அறிவீராயிருப்பீர் (ஆகில்) கருமம் - இன்றியமையாது
செயற்பாலதொருகடன்.

     11. பொ-ரை: பழமையான ஊழிக்காலத்தே தோணியாய் மிதந்த
காரணத்தால் அப்பெயர் பெற்ற தோணிபுரம் என்னும் சீகாழிப்பதியின்
தலைவனும், நல்ல நூற்கேள்வியை உடையவனும் ஆகிய தமிழ்
ஞானசம்பந்தன் நல்லோர்கள் திருமுன்னர், அல்லல்தீர உரைத்தருளிய
அனேகதங்காவதத்தைப் புகழ்ந்து போற்றின், நல்லன வந்துறும். நம்மைச்
சுடும் துன்பங்கள் நம்மை அடைய மாட்டா.

     கு-ரை: தோணிபுரம் - சீகாழி, இறை - தலைவர். தமிழ் -
சைவத்தமிழ் நூல்களை அருளும். கேள்வி - சுருதி. ஒவ்வொரு பதிகமும்
ஒவ்வொருநூலாதல் ஆசிரியர் திருவாக்காலறியலாம். ‘கழுமலத்தின் பெயரை
நாளும் பரவியசீர்ப் பன்னிரண்டும் நன்னூலாப் பத்திமையால் பனுவல்மாலை’.
(தி.2 ப.70 பா.12) ‘வன்றொண்டன் பன்னு தமிழ் நூல் வல்லார்’ (தி.7 ப.41
பா.10) நல்லார்கள் - சிவனடியார்கள். நல்ல -நல்லன. நல்ல அடையும்,
சுடுதுன்பம் அடையா என்க.