பக்கம் எண் :

307

ஆரம் பாம்ப தணிவான்ற னனேகதங் காவதம்
வார மாகிநினை வார்வினை யாயின மாயுமே.         8
1521.



கண்ணன் வண்ணமல ரானொடுங் கூடியோர்க் (கையமாய்
எண்ணும் வண்ணமறி யாமை யெழுந்ததோ ராரழல்
அண்ண னண்ணுமணி சாரல னேகதங் காவதம்
நண்ணும் வண்ணமுடை யார்வினை யாயின நாசமே.   9
1522.

மாப தம்மறி யாதவர் சாவகர் சாக்கியர்
ஏப தம்பட நின்றிறு மாந்துழல் வார்கள்தாம்


செய்தருளிய, கயிலை மலைக்குரியவனும், ஆரமாகப் பாம்பை
அணிபவனும் ஆகிய சிவபிரானின் அனேகதங்காவதத்தை அன்போடு
நினைபவர் வினைகள் மாயும்.

     கு-ரை: ஈரம் - அன்பு. ஏதும் - யாதும். சிறிதும் விலங்கல் -
(கயிலை) மலை. ஆரம் - மாலை. வாரம் - அன்பு. பக்தியின்றி விரம்
ஒன்றே கொண்டு கயிலையைத்தூக்கிய இராவணனுக்கு அவ்வீரம் சிறிதும்
இல்லாதவனாக்கினார். விலங்கலான் - கயிலையான், சிவபிரான்.

     9. பொ-ரை: திருமால் நான்முகனோடு கூடி அடிமுடி அறிய
முற்பட்டபோது அவர்கள் அறிய முடியுமா என எண்ணி ஐயுறும் வண்ணம்
அவர்கட்கு இடையே எழுந்ததோர் அழற்பிழம்பாகிய சிவபெருமான்
எழுந்தருளிய அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்தை நண்ணும்
இயல்புடையார் வினைகள் நாசமாகும்.

     கு-ரை: கண்ணன் - கிருட்டிணனாக அவதரித்த திருமால்.
வண்ணமலர் - தாமரை. வண்ணம் - அழகு. ஐயம் - சந்தேகம்.
அறியாமை-அறியாமல். ஆர் அழல்-நிறைந்த பெரியதீப்பிழம்பு
(அக்கினிமலை வடிவம்) அண்ணல்-சிவபிரான் நண்ணும்-சேர்ந்து
வழிபடும் வண்ணம்-வகைகூட்டியோர்க்கு ஐயமாய் எனப் பொருள்
காண்க. மதுரைத்திருஞானசம்பந்தப் பிள்ளைப் பதிப்பில் ‘கையமாய்’
என்ற பாடமுளது.

     10. பொ-ரை: சிறந்த சிவபதத்தை அறியாதவராகிய சமண புத்தர்கள்
‘ஏஏ’ என இகழத்தக்கவர்களாய் இறுமாப்புடையவர்களாய்