பக்கம் எண் :

306

1519.



வெருவி வேழமிரி யக்கதிர் முத்தொடு வெண்பளிங்
குருவி வீழவயி ரங்கொழி யாவகி லுந்திவெள்
அருவி பாயுமணி சாரல னேகதங் காவதம்
மருவி வாழும்பெரு மான்கழல் சேர்வது வாய்மையே. 7
1520.

ஈர மேதுமில னாகி யெழுந்த விராவணன்
வீர மேதுமில னாக விளைத்த விலங்கலான்


ஆன் ஐந்தாடும் முடியானாகிய சிவபிரான் உங்கட்கு அவ்வானுலகப்
பேற்றினை வழங்கியருளுவான்.

     கு-ரை: தேனையேறும் - தேனை மிகுதியாகப்பெற்ற. அடி -
திருவடியில். சேர்த்துவீர் - (தூவித்)தொழுபவர்களே என்று விளித்தார்.
ஆனை - யானை, வானை - பேரின்ப வீட்டுலகை. நெறி - சரியை
முதலிய நான்கு நெறி. உணருந்தனை - உணரும் அளவை. ஆன்ஐ
-பசுவினிடத்துண்டாகும் பால், தயிர் நெய் முதலிய ஐந்து. ஆனிலங்கிளர்
ஐந்தும் அவிர்முடியாடி, வானை ஏறு நெறியுணரவல்லீரேல்
ஆனையேறுமுடியவன் அருள்வதும் வானையே (தி.2 ப.10 பா.5) என்று
ஐயந்தீர்த்தருளினார்

     7. பொ-ரை: யானைகள் அஞ்சி ஓடுமாறு ஒலித்துப்பாய்வனவும்,
ஒளிபொருந்திய முத்துக்கள், வெண்பளிங்கு ஆகியன நீரை ஊடுருவி
வீழ்வனவும், வயிரங்களைக் கொழித்து அகில்மரங்களை உந்திக்கொண்டு
வருவனவும் ஆகிய வெண்மையான அருவிகள் பாயும் அழகிய சாரலை
உடைய அனேகதங்காவதத்தை அடைந்து அங்கு வாழும் பெருமான்
திருவடிகளை அடைவதே மெய்ந்நெறியாகும்.

     கு-ரை: அநேகதங்காவதம் என்னும் மலையின்மேலிருந்து பாயும்
வெள்ளருவியொலியால் யானைகள் அஞ்சி ஓடும். அவ்வருவி
முத்துக்களையும் பளிங்குகளையும் வயிரங்களையும் அகில் (முதலிய மரங்)
களையும் அடித்து வருகின்றது. அத்தகைய அழகிய சாரல் உடைய மலை;
அம்மலைமேல் எழுந்தருளிய: இறைவன் திருவடி சேர்வது மெய்ந்நெறி.
வெருவி - அஞ்சி. வேழம் - யானை. இரிய - ஓட, உருவி -ஊடுருவி.
வயிரம் - வச்சிரமணி. கொழியா - கொழித்து. அகில் -
மணமுள்ளதொருமரம். வாய்மை - மெய்ந்நெறிக்குப் பண்பாகுபெயர்.

     8. பொ-ரை: அன்பு ஒருசிறிதும் இன்றித் தன் வலிமையைப் பெரிது
என எண்ணி எழுந்த இராவணனை வீரம் அற்றவனாகச்