1517.
|
பிறையு
மாசில்கதி ரோனறி யாமைப் பெயர்ந்துபோய்
உறையுங் கோயில் பசும்பொன் னணியா ரசும்பார்புனல்
அறையு மோசை பறைபோலு மனேகதங் காவதம்
இறையெம் மீச னெம்மா னிடமாக வுகந்ததே. 5 |
1518.
|
தேனை
யேறுநறு மாமலர் கொண்டடி சேர்த்துவீர்
ஆனை யேறுமணி சார லனேகதங் காவதம்
வானை யேறுநெறி சென்றுண ருந்தனை வல்லிரேல்
ஆனை யேறுமுடி யானருள் செய்வதும் வானையே. 6 |
அளவுபடுத்த முடியாத
அனேகதங்காவதம், எந்தையாகிய, திருநீற்றைப்
பூசி மகிழும் சிவபெருமானுக்கு இடமாக உள்ளது.
கு-ரை:
அருவிக்கூட்டம் பாயும்போது உண்டாகும் ஒலிக் குறிப்பு,
தந்தத் திந்தத் தடம் என்றுள்ளதாம். பாய்தலால் சிந்துகின்றன வெந்த
-சுடர்ந்த, கதிரோன் - கதிர்களையுடைய சூரியன். வெந்தகதிர்:- வெங்கதிர்.
மாசு - குற்றம். திங்கள் - சந்திரன். அந்தம் - முடிவு. அளவு - எல்லை.
நாசமுமில்லை அளவுமில்லை என்றபடி.
5. பொ-ரை:
திங்களும் ஞாயிறும் உயர்ச்சியை அறிய முடியாது,
பக்கத்தே விலகிச் சென்று உறையும் வானளாவிய கோயிலை உடைய தாய்ப்
பசும்பொன் போன்ற அழகிய நீர்த்துளிகளை உடையவாய்ப் பறை போன்று
ஒலித்து ஒழுகும் அருவிகளை அடுத்துள்ளது ஆகிய அனேகதங்காவதத்தை,
எம் ஈசனாகிய இறைவன் தனது இடமாகக் கொண்டு உகந்தருளுகின்றான்.
கு-ரை:
பிறையும் - சந்திரனும், மாசு - குற்றம், கதிரோன் -
சூரியனும், அறியாமை - அறியாமல், கோயிலின் உயர்ச்சியை அறிய
மாட்டாமல், பெயர்ந்து - அப்பால் விலகி, சூரிய சந்திரர்
திருக்கோபுரத்தைத் தாண்டற்கு உயர்ந்து செல்ல மாட்டாமல் பக்கத்திற்
பெயர்ந்துபோவர் என்றது. அசும்பு - நீர்த்துளி, துளித்தல் பொருந்திய
புனல். புனல் நீர், அறையும் - ஒலிக்கும் பறை - வாத்திய வோசையை.
6. பொ-ரை:
தேனை மிகுதியாகப் பெற்ற மணம் கமழும் சிறந்த
மலர்களைப் பறித்து இறைவன் திருவடிகளில் சேர்ப்பிக்கும் அடியவர்களே!
வீடுபேறு அடைதற்குப் பின்பற்றும் சரியை, கிரியை முதலான நெறிகளில்
நின்று அவனை உணர நீவிர் வல்லீராயின் யானைகள் ஏறி உலாவும்
அழகிய சாரலை உடைய அனேகதங்காவதத்துள் விளங்கும்
|