பக்கம் எண் :

304

1515.



செம்பி னாருமதின் மூன்றெரி யச்சின வாயதோர்
அம்பி னாலெய்தருள் வில்லி யனேகதங் காவதம்
கொம்பி னேரிடை யாளொடுங் கூடிக்கொல் லேறுடை
நம்ப னாமநவி லாதன நாவென லாகுமே.         3
1516.



தந்தத் திந்தத்தட மென்றரு வித்திரள் பாய்ந்துபோய்ச்
சிந்த வெந்தகதி ரோனொடு மாசறு திங்களார்
அந்த மில்லவள வில்ல வனேகதங் காவதம்
எந்தை வெந்தபொடி நீறணி வார்க்கிட மாவதே.   4


உமையம்மை ஒரு பாகமாக விளங்கும் அழகினராய், அவ்வம்மையோடு
குலாவும் செயல்களுக்கு அளவில்லை.

     கு-ரை: உண்டு என்னும் இரண்டும் வினைமுற்று. அவர்
தொல்படையாகச் சூலமும் மழுவும் உள என்க. ஆலம் - நஞ்சு;
நீலம் - நீலநிறம். நீலோற்பலமுமாம், கோலம் - திருக்கோலம்.
நிலாவுதல் -பிரகாசமாயிருத்தல், குலாவுதல் - பொருந்துதல்.

     3. பொ-ரை: செம்பினால் இயன்ற ஒப்பற்ற மும்மதில்களும்
எரியச் சினத்தை முனையிலே உடைய ஓர் அம்பினால் எய்து
தேவர்கட்கு அருள்புரிந்த வில்லாளியும், அனேகதங்காவதத்தில்
பூங்கொம்பு போன்ற இடையினை உடைய உமையம்மையோடு
கூடிக் கொல்லேற்றைத் தனது ஊர்தியாகக் கொண்ட நம்பனுமாகிய
பெருமான் திருப்பெயரைச் சொல்லாதவை நாக்கள் எனல் ஆகுமோ?

     கு-ரை: மதில் மூன்று-திரிபுரம் சினம் வாயது - எரிதலையுடைய
முனையுடையது. விண்டுவாகிய பாணத்தின் முனையில்
அக்கினியிருப்பதுபற்றிச் சினவாய் எனப்பட்டது. கொம்பின் நேர்
இடையாள்-கொம்புபோன்ற இடையினையுடைய அம்பிகை. நம்பன்-
எல்லா உயிர்களாலும் விரும்புதற்கு உரியவன், சிவ நாமத்தைச்
சொல்லிச் சால்லிப் பழகாத நாக்கள் நாவாகா. (தி.3 ப.4 பா.6,9)
நவிலல்-நாவாற்சொல்லி அடிப்படல். ‘மறை நவில் அந்தணர்’
(புறநானூறு, கடவுள் வாழ்த்து)

     4. பொ-ரை: ‘தந்தத் திந்தத் தடம்’ என்ற ஒலிக்குறிப்போடு
அருவிகள் பாய்ந்து சென்று ஒழுக, வெம்மையான கதிர்களை உடைய
கதிரவன் ஒளியும், குற்றமற்ற திங்களின் ஒளியும் பரவ, முடிவு அற்ற