பதிக
வரலாறு:
பாடிய
சமயம் எழுதப்பட்டிலது.
பண்:
இந்தளம்
ப.
தொ. எண்: 141 |
|
பதிக
எண்: 5 |
திருச்சிற்றம்பலம்
1513.
|
நீடன்
மேவுநிமிர் புன்சடை மேலொர் நிலாமுளை
சூடன் மேவுமறை யின்முறை யாலொர் சுலாவழல்
ஆடன் மேவுமவர் மேயவ னேகதங் காவதம்
பாடன் மேவுமனத் தார்வினை பற்றறுப் பார்களே. 1 |
1514.
|
சூல
முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்ற னனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகநிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே. 2 |
1. பொ-ரை:
நீண்டுயர்ந்த சடைமுடிமீது பிறைமதியைச் சூடியவராய்
வேத விதிப்படி வளர்க்கப்பெற்றுச் சுழன்றெரியும் தீயில் ஆடு தலை
விரும்பும் இறைவர் உறையும் அனேகதங்காவதம் என்னும் தலத்தைப்
பாடுதலை விரும்பும் மனத்தினராய பக்தர்கள் வினைகளையும் அவற்றால்
விளையும் பற்றுக்களையும் அறுப்பர்.
கு-ரை:
நீடல்- (நீள் + தல்) நீளல். நீடுமாம், நிமிர்தல் - உயர்தல்.
புன்மை-மென்மை, பொன்மையுமாம், நிலாமுளை - பிறையாகிய முளை.
சூடல் - சூடுதல். மறையின்முறை - வேதவிதி சுலாவு அழல் -
சுழன்றெரியுந்தீ. அழலாடல் - தீயிலாடுதல் அநேகதங்காபதம் -
வடநாட்டிலுள்ள தொருமலை, பாடல் - பாடுதலை. மேவும் - விரும்பும்
வினைபற்று - வினையும் அதனால் வரும் பற்றும். உம்மைத்தொகை.
2.
பொ-ரை: சூலத்தையும் மழுவையும் படைக்கலங்களாகக்
கொண்டு, உலகைச் சூழ்ந்துள்ள ஆழமான கடலில் தோன்றிய விடத்தை
உண்டு உலகைக் காத்தருளிய பெருமான், அனேகதங்காவதத்தில் நீலநிறம்
பொருந்திய பெரிய கண்களையுடைய
|