1512.
|
மாதொர்
கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர்
ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை
ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல்
நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே. 11
|
திருச்சிற்றம்பலம்
உணர்க. மாலை - ஈண்டுப்பொழுது,
செய்தவம் ஆகிய தொழிலுடைய
அந்தணர், முனிவர். இசை - வேதாகம முழக்கம். புகழெனல் பொருந்தாது.
மெய்தவப் பொடிபூசல் - பால்வண்ண நாதர் என்னும் பெயர்க்கொப்பத்
திருமேனியில் தவக்கோலத்தின் குறியாகிய திருநீற்றைப் பூசுதல். வழிபடுவார்
உடம்பு (பிறவி) ஒழிய வெண்பொடி பூசுதல் எனினுமாம், கைதவம் - வஞ்சம்,
சமண் - சமணர் கட்டுரைத்தல் - கட்டிச் சொல்லும் - பொய்யுரை.
புறப்புறச்சமயத்தார் பொருளில்லாத மொழியைக் குறித்த வினா இது.
11.
பொ-ரை: உமையம்மையை ஒரு கூறாக உடைய நல்ல தவத்தின்
வடிவாய் திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய எம்பெருமான் அருள்
செய்தற்பொருட்டு வினாவிய இதனை ஓதி, ஊழி முடிவாகிய அக்காலத்தே
மிதந்து எழுந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்தன் சொல்லால்
எழுந்த இப்பதிகத்தை முறையோடு நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.
கு-ரை:
நல்தவன் - நல்ல தவத்தன். செய்ய-செய்யற் பொருட்டு.
வினாவுரை-இறந்தகால வினைத்தொகை. உரையை ஓதி என்க. நீதி
-சைவாசாரத்தில் விதித்த ஒழுங்கு. நெடுவானுலகு-திருவடிநீழல். அருள்
செய்த என்ற பாடம் பின்னோர் படைத்தது. அது பொருந்தாது.
திருஞானசம்பந்தர்
புராணம்
தாழ்ந்துபல முறைபணிந்து தம்பிரான் முன்னின்று
வாழ்ந்துகளி வரப்பிறவி மருந்தான பெருந்தகையைச்
சூழ்ந்தஇசைத் திருப்பதிகச் சொன்மாலை வினாவுரையால்
வீழ்ந்தபெருங் காதலுடன் சாத்திமிக இன்புற்றார்.
-சேக்கிழார்.
|
|