1510.
|
பொருது
வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால்
திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச்
சுருதி யாரிரு வர்க்கு மறிவரி யீர்சொலீர்
எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே. 9 |
1511.
|
மைத
ழைத்தெழு சோலையின் மாலைசேர் வண்டினம்
செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர்
மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர்
கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே. 10 |
பத்துத்தலை இராவணன்.
கிரீவம் - கழுத்து. திருக் கயிலையை
எடுத்தபோது அடர்த்த வரலாறு. இதில் இரண்டுமுறை விளித்ததை அறிக.
பலபாரிடம் -பூதகணம்.
9. பொ-ரை:
பெரிய கடல் அலைகள் எட்டுத் திசைகளிலி ருந்தும்
கொண்டு வந்து தரும் முத்து பவளம் முதலிய வளங்களால் பரவிய புகழ்,
செல்வம் ஆகியன நிறைந்த திருவான்மியூரில் வேதங்களை ஓதி மகிழும்
திருமால், பிரமன் ஆகிய இருவர்க்கும் அறிதற் கரியவராய் விளங்கும்
இறைவரே! எருதின்மேல் ஏறி உழன்று பல இடங்கட்கும் மகிழ்வோடு
சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.
கு-ரை:
பொருது - அலைகள்மோதி, வார் - நீளும், வாரி -
வருவாய், புகழ் செல்வம்-வினைத் தொகையும் உம்மைத் தொகையும் ஆக
நின்றது அறிக. சுருதியார் - வேதங்களில் கூறப்பட்ட அயனும் அரியும்,
சிவபரத்துவங் கேட்டவர் எனலுமாம். ஆனேறிச் சில் பலிக்குத் திரிந்த
வரலாறுணர்த்தினார். இதனை, 5இல் விளியாற் குறித்தது உணர்க.
10. பொ-ரை:
கருநிறம் மிக்குத்தோன்றும் சோலையின்கண்
மாலைக்காலத்தில் வண்டுகள் குழுமித் தவஞ்செய்யும் தொழிலையுடைய
அந்தணர் ஓதும் வேதாகமம் போல் இசைபாடிச் சேர்கின்ற
திருவான்மியூரில், மேனிமீது மிகுதியாக வெண்பொடியணிந்த திருமேனியை
உடையவரே! வஞ்சனையை உடைய சமணர் சாக்கியர் உம்மீது பொய்யுரை
கூறிப் பழித்துரைக்கக் காரணம் யாதோ? கூறீர்.
கு-ரை:
மை-மேகம், கரியது என்னும் பொருள்தரும் மைப்பு என்ற
பெயரின் மரூஉவாகிய மப்பு என்னும் வழக்குமொழியை
|