1508.
|
வண்டி
ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த
தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த்
தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர்
பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. 7 |
1509.
|
தக்கில்
வந்த தசக்கிரி வன்றலை பத்திறத்
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த்
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர்
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே. 8 |
புரிசைப்புறம்
- மதிற்புறத்தில் உள்ள வேதபாடசாலை, வீடு,சத்திரம்
முதலியவற்றில், மாசற்ற அந்தணர் வேதாத்திய நயம் ஒழியாச் சிறப்புடையது.
திருவான்மியூர். சூது - சூதாடுதற்கருவியாகிய வல்லுக்கு ஆகுபெயர்.
கொங்கைக்கு உவமை. கொங்கை - உமாதேவி. ஆகுபெயர். முதுமை +
எயில் = மூதெயில். மொய்ம்பு - வலிமை திரிபுர சங்காரத்தை வினாவினார்.
7. பொ-ரை:
வண்டுகள் ஒலிக்கும் பெரிய சோலைகளின் நிழலிலும்
கானலிலும் தெளிந்த அலைகளை உடைய திருவான்மியூரில் அடியவர்கள்
சிவநாமங்களைச் சொல்லித் துதிக்கும், பழமையான கழல்களை அணிந்துள்ள
இறைவரே! முற்காலத்தே நீர் சிவஞானத்தைச் சனகாதியர் நால்வர்க்கு
மட்டும் உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.
கு-ரை:
இரைத்தல் - ஒலித்தல், திரை - அலை, ஓதம் - நீர்,
தொண்டு - தொண்டர், இரைத்து - சிவநாம தோத்திரஞ்செய்து.
பண்டு - கல்லாலின் நிழற்கீழ் உபதேசித்த அன்று. இருக்கு -
சிவஞானோபதேசம். வேதமுமாம். நால்வர் - சனகாதியர். தக்ஷிணாமூர்த்தியா
யிருந்து உப தேசித்ததை வினாவினார்.
8. பொ-ரை:
தகுதியற்ற நெறியில் வந்த இராவணன் கயிலை
மலையைப் பெயர்க்க முற்பட்டுத் தன் தலைகள் பத்தும் பல திசைகளிலும்
வெளிப்பட்டு அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில்
தன் திருமேனியோடு இணைந்த உமையம்மையாரோடும்
வீற்றிருந்தருளியவரே! பல பூதகணங்களும், பேய்க்கணங்களும் உம்மைச்
சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.
கு-ரை:
தகு இல் தகுதியில்லாத நெறியினில், தசக்கிரீவன் -
|