பக்கம் எண் :

315

1529.







எங்கு மாகிநின் றானு மியல்பறி
     யப்படா
மங்கை பாகங்கொண் டானு மதிசூடு
     மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு நான்குக்
     குணர்வுமாய்
அங்க மாறுஞ்சொன் னானுமை யாறுடை
     யையனே.                    6


ஆகியவற்றை ஆடும் முடியினரும் ஆகிய பெருமைகட்கு உரியவர்
ஐயாறுடைய ஐயன் ஆவார்.

     கு-ரை: வேனல்-வெம்மை, ‘கெடிலக்கரை வேனலானை யுரித்த
வீரட்டர்’ (தி.5 ப.54 பா.5). வானையூடறுக்கும் மதி-விண்ணூடு
அறுத்துச்செல்லும் பிறை. தேன் முதலிய ஏழும் அபிடேக திரவியங்கள்,
நெய், பால், தயி்ர் என்னும் மூன்றும் தனித்தனி ஆட்டற்குரியன.
இம்மூன்றையும், ‘ஆடினாய் நறுநெய்யொடு பால் தயிர்’ என்று தனித்தும்,
‘ஆனிலங்கிளரைந்தும் அவிர் முடியாடி’ என்று ஐந்தாகச் சேர்த்தும்
கூறுதல் திருமுறை வழக்கு. ‘ஆனஞ்சு’ பஞ்ச கௌவியம், (ஞானபூசாவிதி.14.
உரை பார்க்க) தெளி - தெளிந்த சாறு. (ஆகுபெயர்) தெங்கு - தென்னை.
தென்கு என்பதன் மரூஉ.

     6. பொ-ரை: எங்கும் நிறைந்தவனும் பிறர் அறியவாராத
இயல்பினனும், உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும் மதிசூடிய
மைந்தனும் குற்றமற்ற பதினெண் புராணங்கள், நான்கு வேதங்கள் அவற்றை
அறிதற்குதவும் ஆறு அங்கங்கள் ஆகியவற்றை உரைத் தருளியவனும் ஆய
பெருமான், ஐயாறுடைய ஐயனாவான்.

     கு-ரை: எங்குமாகி நின்றான் - அகண்ட வியாபகன். இயல்பு
அறியப்படாமங்கை. சிவனுக்கும், ஏற்றிக்கூறலாம். பங்கம் - இழிவு,
பதினெட்டு-பதினெண்புராணம் ‘சூதன் ஒலிமாலை’ (தி.3 ப.54.பா.8
பெரிய புராணம். திருஞான 840.) நான்கு - நாலு வேதம்.

     உணர்வு - மலம் அகற்றற் பொருட்டு, உயிரினிடத்து நிலை
பெற்றுள்ள பர (சிவ) ஞானமாகிய திருவருளும், அத்திருவருளைத்
தெளியவோதுகின்ற அபர ஞானமாகிய சிவாகமங்களும், அங்கம்
-வேதாங்கங்கள். (பார்க்க: பா.3 உரை)