பக்கம் எண் :

316

1530.







ஓதி யாருமறி வாரிலை யோதி
     யுலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட்
     சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி
     காற்றுமாய்
ஆதி யாகிநின் றானுமை யாறுடை
     யைய னே.                     7
1531.



குரவ நாண்மலர் கொண்டடி யார்வழி
     பாடுசெய்
விரவு நீறணி வார்சில தொண்டர்
     வியப்பவே


     7. பொ-ரை: யாவராலும் ஓதி அறிதற்கு அரியவனும், உயிர்கள்தாமே
அறிதற்கு இயலாதவனாயினும் அவனே ஓதுவித்தும் உணர்வித்தும்
சோதியாக நிறைந்துள்ளவனும், சுடர்ச் சோதியுட் சோதியாக விளங்குபவனும்,
வேத வடிவினனும் விண், மண், எரி, காற்று ஆகிய உலகின் முதல்வனாய்
விளங்குபவனும் ஆகி பெருமான் ஐயாறுடைய ஐயனாவான்.

     கு-ரை: வேதி - வேதசொரூபன். விண் - ஆகாயம், எரி -
தீக்கடவுள். ஆதி - முதற்பொருள். ஓதியறிவார் யாரும் இல்லை. உயிர்கள்
ஓதியறிதலில்லையேனும், சிவபிரான் தானே தன்னை உயிர்க்கு ஓதுவித்தும்
உணர்வித்தும், சேதனாசேதனப் பிரபஞ்சம் எல்லாம் சோதி (ஒளி) யாய்
நிறைந்துள்ளான். சுடரையுடைய சோதிகளாகிய சூரிய சந்திராக்கினிக்குள்
சோதியாய் உறைபவன். (திருவிசைப்பா.2) வேதியாகி -சேதன சொரூபியாகி,
விண்........ஆகி - அசேதனரூபமாகி, (தடத்த வடிவத்தைச் சார்ந்தது). பழம்
பதிப்பிலுள்ள ‘எரிகாற்றுமாய்’ என்ற பாடமே சிறந்தது. எரி - தீ.
எறியுங்காற்று எனின், காற்று என்பதில் உள்ள பொருளே எறிதலுமாதலின்
சிறப்பில்லை.

     8. பொ-ரை: ஐயாறுடைய ஐயன் அடியவர் அன்றலர்ந்த குரா
மலர்களைக் கொண்டு வழிபடவும், திருநீற்றை மேனியெங்கும் விரவிப்
பூசிய தொண்டர்கள் வியந்து போற்றவும், அரவாபரணனாய்
எழுந்தருளியுள்ளான். நம் பாவங்கள் அவனை வழிபட நீங்குவதால்,