|
பரவி
நாடொறும் பாடநம்
பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானுமை
யாறுடை யையனே. 8 |
1532.
|
உரைசெய்
தொல்வழி செய்தறி யாவிலங்
கைக்குமன்
வரைசெய் தோளடர்த் துமதி சூடிய
மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட பாலது
காதலான்
அரைசெய் மேகலை யானுமை யாறுடை
யையனே. 9 |
நாமும் நாளும் அவனைப்
பரவி ஏத்துவோம்.
கு-ரை:
குரவம் - குராமரம். நாள் மலர் - காலையிற் பூத்த பூ
வியப்ப-புகழ்ந்துரைக்க, பரவி - வாழ்த்தி, பறைதல் - நீங்குதல், அரவம்
-பாம்பு. ஆர்த்து - கட்டி, (அணிந்து) உகந்தான் - உயர்ந்தவன். விரவி
என்றது புதிய பாடல்.
9.
பொ-ரை: வேதங்கள்
உரைத்த பழமையான நெறியை
மேற்கொள்ளாத இலங்கைமன்னன் இராவணனைக் கயிலை மலைக்கீழ்
அகப்படுத்தி அவனது தோள் வலிமையை அடர்த்தவரும், மதிசூடிய
மைந்தரும் காவிரி வடகரையில் விளங்கும் ஐயாற்றில் மகிழ்வோடு
இடையில் மேகலாபரணம் புனைந்து உறைபவரும் ஆகிய பெருமானார்,
ஐயாறுடைய ஐயன் ஆவார்.
கு-ரை:
இராவணன்
மிக்க சிவபக்தனாகித் திரிலோகாதி பத்தியம்
முதலிய பெருவரங்களைப் பெற்றவன். அதற் குரிய வேதாகமவழி
அவனுக்குப் புதுவழியன்று. தொல் (பழைய) வழியே. அறியாமை
மேலிட்டபோது, அத்தொல் வழிமறந்து திருக்கயிலையைப் பெயர்த்து
எடுக்க முயன்றான். அதனால், அவனுடைய மலைகளைப் போன்ற
தோள்களை நசுக்கப் பெருவிரல் நுனியை மட்டும் ஊன்றி யருளினார்,
சந்திரசேகரரான வீரனார். மதி - வளராததும் தேயாததும் ஆன
திங்கட்பிறை. மைந்தனார் - வீரனார். திருவையாறு காவிரியின் வடகரைக்
கண் உள்ளது. காதல் - அத்தலத்தில் எழுந்தருளியிருக்க விரும்புதல்.
|