பக்கம் எண் :

318

1533.







மாலுஞ் சோதி மலரானு
     மறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங்
     கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று
     பவளந் திரண்டதோர்
ஆல நீழலு ளானுமை
     யாறுடை யையனே.           10

1534.



கையி லுண்டுழல் வாருங்
     கமழ்துவ ராடையான்
மெய்யைப் போர்த்துழல் வாரு
     முரைப்பன மெய்யல


அரைசெய் மேகலையான் - மேகலாபரணம் இடுப்பிற் கொண்டவன்,
மேகலை-பொன்னாடை விசேடம். ‘எண்கோவை மேகலை’.

     10. பொ-ரை: ஐயாறுடைய ஐயன் திருமாலும் நான்முகனும் அறிய
இயலாத சத்திய வடிவானவன். அவனது கால் போலத் திரண்ட அழகிய
காம்பினையும் கழல் போன்ற கொழுந்தினையும் பவளம் போன்ற
பழங்களையும் ஈன்ற திரண்ட கல்லால மரநிழலில் எழுந்தருளியுள்ளான்.

     கு-ரை:மால் - (மயக்கம்) விண்டு. சோதிமலர் - தாமரைப்பூ.
வாய்மையான் - சத்தியசொரூபி. காலம் காம்பு வயிரம் கடிகையன்
என்பதன் பொருள் புலப்பட்டிலது. ஆயினும் ஒருவாறு எழுதலாம். கால்
-திருவடி, அம் காம்பு - அழகிய காண்பு, வயிரம் - வைரரத்னம், கடிகை
-துண்டு, கால்போலக் காம்பு, கழல்போலக் கொழுந்து. கடிகையம்
பொற்கழல் என்றிருந்தது போலும். ஆலமரம் இறைவனது பொற்கழல்போலப்
பொன்மையும் மென்மையும் ஒளியும் அழகும் உடைய கோலமாய்க்
கொழுந்தீன்று என்க. ஈன்று - தோன்றி. ஆலம்பழம் செந்நிறமுடையது
ஆதலின், பவளம் திரண்டதோர் ஆலம் என்றார். பவளம்போன்ற செந்நிறம்
உடைய பழங்களைப் பவள மென்றது உவமையாகு பெயர். கல்லாலுக்குச்
சாதியடை.

     11. பொ-ரை: கையில் உணவை வாங்கி உண்டு உழலும் சமணரும்,
நாற்றம் அடிக்கும் துவராடையால் உடலைப் போர்த்துத்