|
மைகொள்
கண்டத்தெண்டோண்முக்க ணான்கழல்
வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானுமை யாறுடை
யையனே. 11 |
1535.
|
பலிதி ரிந்துழல்
பண்டங்கன் மேயவை
யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடற் காழியர்
காவலன்
ஒலிகொள் சம்பந்த னொண்டமிழ் பத்தும்வல்
லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய சீர்பெறு
வார்களே. 12
|
திருச்சிற்றம்பலம்
திரியும் புத்தரும்
கூறும் உரைகள் மெய்யல்ல என்பதை அறிந்து,
நீலகண்டமும் எண் தோளும் மூன்று கண்களும் உடைய சிவனே
பரம்பொருள் எனத் தேர்ந்து வாழ்த்த, ஐயந்தேரும் ஐயாறுடைய ஐயன்
நம்மைக் காத்தருளுவான்.
கு-ரை:
கையில் உண்டு உழல்வார் - கையில் உணவை ஏந்தி
உண்டு திரியுஞ் சமணர். கமழ் - உழல்வார் - நாற்றம் வீசும் பழுப்பேறிய
ஆடையால் உடம்பைப் போர்த்துத் திரியும் புத்தர் மைகொள் கண்டம்
-நீலகண்டம். முக்கண் - சோம சூரியக்கினி. ஐயம் - பிச்சை.
12.
பொ-ரை:பலி ஏற்று உழல்பவனாய், பாண்டரங்கக் கூத்தாடும்
பெருமான் எழுந்தருளிய திருவையாற்றினை உலகில் கலிவாராமல் கடியும்
வேள்வி செய்தற்கு உரிமை பூண்ட திருக்கரங்களை உடைய, கடலை
அடுத்துள்ள காழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் இசையொலி கூடிய
சிறந்த தமிழால் பாடிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கள் புகழ் மலிந்த
வானுலகில் நிலையான சிறப்பைப் பெறுவார்கள்.
கு-ரை:
பண்டங்கன் - பாண்டரங்கம் என்னுந் திருக்கூத்தை
ஆடுபவன். கலி - வறுமை, கலிகடிந்தகையான் என்றது திருஞான சம்பந்தர்
எரி ஓம்பும் திருக்கையால் அளவற்றோர் வறுமை நீக்கிய
|