உண்மையை உணர்த்திநின்றது.
கடிந்த-நீக்கிய, உரவார் கலையின்
கவிதைப் புலவர்க்கு ஒருநாளுங் கரவாவண்கைக் கற்றவர் சேருங்
கலிக்காழி (தி.1 ப.102 பா.1) யில், திருஞானவேந்தர் திருக்கைகள் உலகவர்
கலி (வறுமை) முதலிய துன்பங்களைக் கடிதலில் ஐயமின்று, கடந்த என்றது
புதியது.
காழியர்
காவலன் என்றதால், பாலறாவாயரான காரணம் பற்றி,
அக்காழியில் இருந்த அந்தணர் எல்லோரும் அப்பெருமான் திருவடித்
தொண்டர் ஆயினர் என்பதும், காழி வேந்தர் தலைவரானார் என்பதும்,
சிவனருள் பெற்றவரையே, நல்லோர், தமக்குக் காவலராகக் கொள்ளும்
வழக்கம் உடையவராயிருந்தனர் என்பதும் புலப்படும். ஒலிகொள்
சம்பந்தன்;-பரநாதத்தைக்கொண்டு பாட்டாக அருளும் சிவஞான சம்பந்தர்.
கொள் தமிழ் எனலுமாம்.
திருஞானசம்பந்தர்
புராணம்
கோடல்கோங்
கங்குளிர்கூ விளம் என்னுந் திருப்பதிகக்
குலவு மாலை
நீடுபெருந் திருக்கூத்து நிறைந்ததிரு உள்ளத்து
நிலைமை தோன்ற
ஆடுமாறதுவல்லான் ஐயாற்றெம் ஐயனே
என்று நின்று
பாடினார் ஆடினார் பண்பினொடுங் கண்பொழி நீர்
பரந்து பாய.
பலமுறையும் பணிந்தெழுந்து புறம்போந்து பரவுதிருத்
தொண்ட ரோடு
நிலவுதிருப் பதியதன்கண் நிகழுநாள் நிகரிலா
நெடுநீர்க் கங்கை
அலையுமதி முடியார்தம் பெரும்புலியூர் முதலான
அணைந்து போற்றிக்
குலவுதமிழ்த் தொடைபுனைந்து மீண்டணைந்து பெருகார்வங்
கூரு நாளில்.
-சேக்கிழார்.
|
|