|
தேவி
லெட்டர்திரு வாஞ்சிய
மேவிய செல்வனார்
பாவந் தீர்ப்பர்பழி போக்குவர்
தம்மடி யார்கட்கே. 3 |
1539.
|
சூல
மேந்திவளர் கையினர்
மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் பூசுவர்
பேசுவர் மாமறை |
பரை, ஆதி, இச்சை,
ஞானம், கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய
திருமேனியை யுடையவர், பஞ்சப் பிரம மந்திர தேகமும் ஆம். அருவம்
இரண்டு, அருவுருவம் ஒன்று, உருவம் இரண்டு ஆகிய ஐந்து உடலும்
சொரூபமல்லவாயினும் உபசாரத்திருமேனியாகும். அநாதி முத்த
சித்துருவாகிய முதல்வனுக்குத் தன்னுருவமாகிய உலகத்தைத் தொழிற்படுத்தற்
பொருட்டும் வேறோருவம் வேண்டப்படுவதன்றாயினும். . .உயிர் வர்க்கங்கள்
பொருளியல்பு உணர்ந்து வீடுபெறுமாறு வேதாகமங்களைக் கோவைப்படச்
செய்தற் பொருட்டும் அதனைக் குருபரம்பரையின்கண் வைத்தற்பொருட்டும்
திருமேனி ஒருதலையான் வேண்டப்படும் (சித்தியார்.66 உரை) ஆறர் இ -
அறுகுணத்தர், (ஷாட்குண்யர்) முற்றறிவு முதலியவை. பகவர் எனலுமாம்.
உடலஞ்சினர். ஆறர் - பிறவியையஞ்சிய நல்லோர் வழியில் விளங்குபவர்,
உடலஞ்சு: பஞ்சகோசம், ஆறர் - கங்கையாற்றினர் எனினுமாம்.
நன்மூவிருதொன்னூலர் முத்தீயர் நால் வேதத்தர்
வீழிமிழலையார் (தி.3
ப.9. பா.7) என்றதில் வருமாறுங் கொள்ளலாம். திருவெழுகூற்றிருக்கையும்
நோக்குக. ஏழ் ஒசையர் - ஏழிசையாய் (இசைப்பயனாய்) இருப்பவர்.
தேவில் - தெய்வத் தன்மையில். எட்டர் -அட்டமூர்த்தி, எண்குணத்தர்
எனின் ஆறர் என்பதற்கு ஷாட்குண்யர் என்னாது வேறுரைக்க. பாவம் -
தீவினை. பழி - தீச்சொல். முறையே செயலும் மொழியுமாய்த் தன்
திரிகரணத்தாலும் பிறர் வாயாலும் நிகழ்வன. அடியார்கட்கே
பாவந்தீர்ப்பர்பழி போக்குவர் எனவே அல்லார்க்கு இல்லை என்றதாம்.
4.
பொ-ரை: சூலம் ஏந்திய நீண்ட கையினை உடையவர்; தம்
திருமேனிக்குப் பொருத்தமாக நல்ல திருநீற்றை மிகுதியாகப் பூசுபவர்;
சிறந்த வேத வசனங்களைப் பேசுபவர். ஆலகாலம் உண்டருளிய
அவ்விறைவர், ஒழுக்கத்தால் சிறந்தோர் வாழ்வதால் புகழ்பெற்ற திரு
|