பக்கம் எண் :

323

சிவம் சத்தி என இரண்டாவர். ஒன்றாய் வேறாய் உடனாய் மூன்றாவர்.
நாவினால் நான்கு வேதங்களை அருளியவர். பரை ஆதி இச்சை ஞானம்
கிரியை என்னும் ஐவகைச் சத்தியாகிய திருவுருவை உடையவர்.
ஆறுகுணங்களை உடையவர். ஏழு ஓசை வடிவினர். அட்டமூர்த்தங்களாய்
விளங்குபவர். இத்தகையவராய்த் திருவாஞ்சியத்தில் எழுந்தருளியுள்ள
செல்வனார் தம் அடியவர்களின் பாவங்களைத் தீர்ப்பர். அவர்
அடியவர்கட்கு வரும் பழியைப் போக்குபவர்.

     கு-ரை: இதனுள் ஒன்று முதல் எட்டீறாகிய எண்ணுப்பெயர்
அமைந்த அழகு உணரத்தக்கது. 79, 380-ஆம் (திருக்கழுமலம்,
திருவோமமாம்புலியூர்த்) திருப்பதிகங்களுள்வரும் ‘எண்ணிடை யொன்றினர்’
‘மணந்திகழ் திசைகளெட்டும்’ எனத் தொடங்குந் திருப்பாடல்களை இங்கு
நோக்கின். இவ்வாசிரியர்க்கு இவ்வாறு பாடியருளும் எளிமை இனிது
விளங்கும். மேவில் ஒன்றர் - விரும்பி வழிபட்டால்
அநந்நியமாதலையுடையவர், ‘அறிபவன் அருளினாலே அநந்நியமாகக்
காண்பன்’ என்பதும் ‘அறிய வல்லான் ஒருவனுக்கு அச்சிவப்பொருள்
அதனோடு ஒற்றித்து நின்று அவ்வருளானே அறியற் பாலதாம் என்னும்
அதன் உரையும் (சித்தியார்.245), சைவ உபநிடதங்களினும்
சைவாகமங்களினும் அந்நியமின்றி நின்றுணரும் அநுபவ மாத்திரையிற்
கோசரிப்பது என்று ஓதப்படுஞ் சிவனருளாம் மெய்ப் பொருள்” என்னும்
சிவஞான பாடிய வசனமும் (சூ.6.) ஈண்டுணரத் தக்கன. ஒன்றர்-
ஒருபொருளாயிருப்பவர் எனலுமாம். விரிவுற்ற இரண்டினர்- விரிதலடைந்த
ஞானமும் கிரியையும் உடையவர். சிவமும் சத்தியுமானவர் எனலுமாம்.
“சிவசத்தி மூன்றனுள் யாண்டும் ஒரு பெற்றித் தாய் வியாபரிக்கும் இச்சையை
ஒழித்து, ஒழிந்த ஞானக் கிரியைகள் இரண்டும் தனித்தனி வியாபரித்தலானும்
ஒத்து வியாபரித் தலானும் தம்முள் ஏறிக் குறைந்து வியாபரித்தலானும்”
(சித்தியார் உரை. 85) விரி வுற்றன. இரண்டு-சொரூபம் தடத்தம் எனலுமாம்.
விலவுற்ற இரண்டு-போகமும் முத்தியும் ஆதலும் பொருந்தும். மூன்றுமாய்-
இச்சா ஞானக் கிரியையாய். “ஒன்றதாய் இச்சா ஞானக்கிரியை என்று
ஒருமூன்றாகி” (சித்தியார் 83.).அவை முறையே உயிர்கட்கு மலந்தீர்த்துச்
சிவங்கொடுக்கும் கருணையும், அதற்கான உபாயங்களை அறியும் அறிவும்,
அவற்றை அவ்வாறே கொண்டு செய்யும் சங்கற்பமும் ஆகும். இலயம்போகம்
அதிகாரமாய், ஒன்றாய் வேறாய் உடனாய், மூன்று தீயுமாய் முச்சுடருமாய்
எனினும் பொருந்தும். மூன்றும் ஆய் நாவின் நாலர் என்று கொண்டு பதி,
பசு, பாசம் என்னும் மூன்று பொருளையும் ஆய்ந்துணர்த்தும் நான்மறை
நாவர் எனலுமாம். உடல் அஞ்சினர்-