1537.
|
கால
காலர்கரி கானிடை
மாநட மாடுவர்
மேலர் வேலைவிட முண்டிருள்
கின்ற மிடற்றினர்
மாலை கோலமதி மாடமன்
னுந்திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப்பொலி
கோயில் நயந்ததே. 2 |
1538.
|
மேவி
லொன்றர் விரிவுற்ற
விரண்டினர் மூன்றுமாய்
நாவி னாலருட லஞ்சின
ராறரே ழோசையர் |
2.
பொ-ரை: காலனுக்குக் காலர்; கரிந்த இடுகாட்டில் சிறந்த
நடனம் புரிபவர்; எப்பொருட்கும் எல்லா உயிர்கட்கும் மேலானவர்;
கடலிடைத்தோன்றிய நஞ்சினை உண்டு இருள்கின்ற கண்டத்தை
உடையவர்; அச்சிவபிரான், மாலைக்காலத்தே தோன்றும் அழகிய மதி
உச்சியில் பொருந்தும் மாடவீடுகள் நிறைந்த திருவாஞ்சியத்தில் உள்ள
அழகிய கோயிலை, உலகோர் வந்து தம்மைப் பணிந்து அருள் பெறுமாறு
விரும்பி விற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
காலகாலர் - இயமனுக்குங் காலமுடிவைச் செய்பவர்.
இயமனுக்கியமன் என்பாருமுளர். கரிகான் - கரிந்தகாடு, மேலர்
-எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் எத்தேவர்க்கும் மேலாயுள்ள முழு
முதல்வர். வேலை - கடல் மிடறு - கழுத்து, நஞ்சுண்டிருண்ட கண்டத்தர்.
இருள்கின்ற என நிகழ்வாற் கூறியதால், இன்னும் இருளும்படி செய்யுங்
கொடிய நஞ்சையுண்டு வாழ்வித்த கருணைத்திறத்தை அறியலாம்.
திருவாஞ்சியத்து மாடங்கள் சந்திரமண்டலத்தின் அளவும் ஓங்கியவை
என்று உயர்த்துக்கூறினார். மதிமண்டலத்தை அளாவிய மாடம். மாலைமதி,
கோலமதி, மாலைப்பொழுதும் அழகும் மதிக்கு அடை, ஞாலம் -
உலகத்துயிர்கள், இடவாகுபெயர், ஞாலம் - தொங்குவது என்னுங் காரணப்
பொருளதாய், முன்னோரது பூகோள ககோள ஞானத்தை உணர்த்துவது
அறிக. நயந்தது - விரும்பியது.
3.
பொ-ரை: விரும்பி வழிபடின் நீ நான் என்ற வேற்றுமை யின்றி
அந்நியம் ஆவர். ஒன்றாய் அரும்பிய அவர் பலவாய் விரியுமிடத்து,
|