1663.
|
எரியார்
சடையும் அடியும் இருவர்
தெரியா ததொர்தீத் திரளா யவனே
மரியார் பிரியா மருகற் பெருமான்
அரியாள் இவளை அயர்வாக் கினையே. 9 |
1664.
|
அறிவில்
சமணும் அலர்சாக் கியரும்
நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய் மருகற் பெருமான்
நெறியார் குழலி நிறைநீக் கினையே. 10 |
தோன்றலனாய் - செய்வது
இன்னதென்று தோன்றப் பெறாதவனாய்.
வலம்கொள் - வலமாக வந்து பணிந்து வேண்டி வரம் கொண்ட,
தோன் றலனாய் என்பது, வலங்கொள் என்பதொடு இயையும்; இன்றேல்,
முடிபில்லாதொழியும். அலங்கல் - மாலை. அசைந்திடுதலும் ஆம்.
9.
பொ-ரை: நெருப்புப் போலச் சிவந்த சடையையும்,
அடியையும்
திருமால் பிரமன் ஆகிய இருவர் அறியமுடியாதவாறு ஒளிப்பிழம்பாய்
உயர்ந்து தோன்றியவனே! பிறவி நீங்கிய முக்தர்கள் வாழும் திருமருகலில்
விளங்கும் பெருமானே! அரியவளாக இத்தலத்துக்குவந்த இவளைத்
துன்புறச்செய்தாயே! இது தக்கதோ?
கு-ரை:
எரி ஆர் சடை - நெருப்பைப்போலும் சிவந்த சடை.
தீத்திரள் - ஒளிப்பிழம்பு, இலிங்கபுராண வரலாறு. மரியார் - திருவடி
வழிபாட்டால் பிறவி நீங்கியவர். (ஜீவன் முக்தர்) அரியாள் - அரியவள்.
10.
பொ-ரை: அறிவற்ற சமணர்களும் எங்கும் பரவி
வாழும்
சாக்கியர்களும் நெறியல்லனவற்றைச் செய்து நின்று உழல்பவராவர்.
மான்கன்றை ஏந்திய கையை உடையவனே! மருகற் பெருமானே!
உன்னை நினையும் அடர்ந்த கூந்தலினளாய இப்பெண்ணின் மனத்தைச்
சிதறுண்ணச்செய்தீரே, இது தகுமோ?
கு-ரை:
அறிவு இல் சமண் - மெய்ப்பொருள் உணர்வில்லாத
சமணர். அலர் - பலராகப் பரவிய. நெறி அல்லன - சைவநெறி அல்லாத
புன்னெறிகள். மறி - மான்கன்று, நெறி - நெறித்தல், அடர்ந்திருத்தல்.
நிறை - நெஞ்சைக் கற்புநெறியில் நிறுத்தல் (குறள்-57 உரை) நிறை
எனப்படுவது மறை பிறரறியாமை (கலித்தொகை. 136) என்ற தன்
கருத்தும் அறிக.
|