1661.
|
வழுவாள்
பெருமான் கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள் இரவும் பகலும்
மழுவா ளுடையாய் மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத் துயராக் கினையே. 7 |
1662.
|
இலங்கைக்
கிறைவன் விலங்கல் எடுப்பத்
துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதில்சூழ் மருகற் பெருமான்
அலங்கல் இவளை அலராக் கினையே. 8
|
வந்தடைந்த இப்பெண்
விடியும் அளவும் துயிலாதவளாய்த் துயருறுகிறாள்.
அடியவளாகிய இவள்மீது பழிமொழி வருவது தக்கதோ?
கு-ரை:
பரவ - துதிக்க மலரும் - பரவும். புலரும் தனை - விடியு
மளவும். துயிலாள் - தூங்காதவள், புடை - பக்கம், வெளி, அலர் - பழிச்
சொல்.
7.
பொ-ரை:
மழுப்படையை உடையவனே! மருகற் பெருமானே!
தவறாமல் பெருமான் திருவடிகள் வாழ்க என்று கூறிக் கொண்டே துயில்
எழுந்து இரவும் பகலும் உன்னையே நினைந்து தொழுபவளாகிய இவளைத்
துயருக்குரியவள் ஆக்கினையே! இது தகுமோ?
கு-ரை:
பெருமான் கழல் வாழ்க எனா வழுவாள் எழுவாள் என
மாற்றுக. எனா - என்று. வழுவாள் - தவறாதவளாய். எழுவாள் -
உறக்கிவிழித் தெழுவாள். இரவும் பகலும் நினைவாள். மழுவாள் -
மழுவாகிய படை.
8.
பொ-ரை:
இலங்கைக்கு அரசனாகிய இராவணன்
கயிலைமலையைப் பெயர்த்த போது, அவனது ஆற்றல் அழியுமாறு,
விளங்கும் தனது காற்பெருவிரலை ஊன்றிய அளவில் அவன்
செய்வதறியாது இடர்ப்பட்டு மீண்டு, வலமாக வந்து பணிந்து வரம்
கொண்ட மருகற்பெருமானே! மாலைசூடி மணம் கொள்ள இருந்த
இவளுக்குத் துன்பம் வரச்செய்தனையே! இது தக்கதோ?
கு-ரை:
இறைவன் - அரசன். (இராவணன்). விலங்கல் - மலை
(கயிலை) துலங்கு - விளங்கிய. ஊன்றலும் - அழுத்தியதும்.
|