1658.
|
ஒலிநீர்
சடையிற் கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய் பழியில் புகழாய்
மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே. 4 |
1659.
|
துணிநீ
லவண்ணம் முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம் உடையாய் மருகல்
கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே. 5 |
1660.
|
பலரும்
பரவப் படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன் றுடையாய் மருகல்
புலருந் தனையுந் துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ அடியா ளிவளே. 6
|
4.
பொ-ரை: முழங்கிவந்த கங்கையைத் தன் சடைமிசை
மறைத்தவனே! உலகெங்கணும் சென்று பலியேற்றுத் திரிபவனே! குற்றம்
அற்ற புகழாளனே! நீர் நிறைந்த திருமருகலைத் தனது இடமாகக் கொண்டு
மகிழ்பவனே! இப்பெண்ணை மெலியும் நீர்மையள் ஆக்கவும்
விரும்பினையோ?
கு-ரை:
ஒலிநீர் - முழங்குங் கங்கை. கரந்தாய் - மறைத்தாய். பலி
-பிச்சை. நீர்மலி மருகல் என்றும் மாற்றலாம்.
5.
பொ-ரை: தெளிந்த நீல நிறம் பொருந்திய மேகம் தோன்றினாற்
போன்ற அழகிய நீலகணட்த்தை உடையவனே! திருமருகலை வந்தடைந்த,
நீலவண்டுகளின் தொகுதியோ எனக் கருதக் கூடிய கூந்தலை உடைய
இளைய இப்பெண்ணின் ஒளிபொருந்திய கண்கள் கலங்குமாறு இவளுக்கு
அயர்வை உண்டாக்கி விட்டாயே. இது தகுமோ?
கு-ரை: துணி
நீல . . . . . . . .கண்டம் - தெளிந்த நீலநிறம் உடைய
மேகம் தோன்றினாற்போன்ற அழகிய நஞ்சாற் கறுத்த திருக்கழுத்தை. கணி -
கருதுகின்ற. அயர்வு - சோர்வு. மறதி.
6.
பொ-ரை:பலராலும்
பரவிப் போற்றப் படுபவனே! சடையின் மேல்
விளங்கித் தோன்றும் பிறை ஒன்றை உடையவனே! திருமருகலை
|