1656.
|
சிந்தா
யெனுமால் சிவனே யெனுமால்
முந்தா யெனுமால் முதல்வா எனுமால்
கொந்தார் குவளை குலவும் மருகல்
எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே. 2
|
1657.
|
அறையார்
கழலும் அழல்வா யரவும்
பிறையார் சடையும் உடையாய் பெரிய
மறையார் மருகல் மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே. 3 |
மடையில். மருகல் -
ஒருவகை வாழை மரத்தாற்பெற்ற தலப்பெயர்.
உடையாய் - சுவாமீ. உள் மெலிவு - மனநோய்.
2.
பொ-ரை:
பூங்கொத்துக்கள் குவளை மலர் ஆகியன மலர்ந்து
மணம் பரப்பும் திருமருகலில் எழுந்தருளிய எம் தந்தையே! இவள் உன்னை
நினைந்து, சிந்தையில் நிறைந்துள்ளவனே! என்றும் சிவனே என்றும்,
எல்லோர்க்கும் முற்பட்டவனே என்றும், முதல்வனே என்றும் புலம்பி
நைகின்றாள். இவள் துன்பத்தைப் போக்காதிருத்தல் உன் பெருமைக்குத்
தக்கதோ?
கு-ரை:
சிந்தாய் - சி்ந்தையே; அழியாதவனே எனலுமாம். முந்தாய்
-முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம்பொருளே. முதல்வா -
ஆதியனே. கொந்து - பூங்கொத்து. எந்தாய் - எம் அப்பனே, எம்
அன்னையே. ஏசறவு - மெய்ம்மறத்தல்.
3.
பொ-ரை:
ஒலிக்கின்ற வீரக்கழலையும், கொடிய விடம்
பொருந்திய வாயினை உடைய பாம்பையும் பிறையணிந்த சடையினையும்
உடையவனே! பெருமைக்குரிய வேதங்களைக் கற்றுணர்ந்த மறையவர்
வாழும் திருமருகலில் மகிழ்ந்து உறைபவனே! இப்பெண்ணை அவள்
முன்கையில் அணிந்திருந்த வளையல்களைக் கவர்ந்ததோடு அழகையும்
கவ ந்தாயே! இது தகுமோ?
கு-ரை:
அறை - ஒலி, அழல் வாய் அரவு - (நஞ்சு) வெப்பம்
பொருந்திய வாயுடைய பாம்பு. மறையார் மருகல் - வேதங்களை
உணர்ந்தவர் வாழ்கின்ற திருமருகல். இறை - கைச்சந்து. எழில் - அழகு.
|