பதிக
வரலாறு:
கணபதீச்சரத்தை
வழிபட்டு மீண்ட கவுணியர்கோன், அருகிலுள்ள
திருமருகலில் எழுந்தருளிய மாணிக்கவண்ணர் கழலிணை வணங்கி உருகிய
அன்புறுகாதல் உள்ளலைப்பத் தெள்ளுமிசையுடன் பெருகும் தமிழ்த்தொடை
சார்த்தி அங்கிருந்தார். அவை இப்பொழுது கிடைத்தில. அந்நகரில்,
அந்நாளில், வணிகன் மகள் ஒருத்தி, தன்னை மணக்க இருந்தவன் மடத்தில்,
இரவில் துயிலும்போது பாம்பு கடித்து இறக்க, அழுது புலம்பும் ஒலி
கேட்டது. அங்குச் சென்ற புகலிவேந்தர் பயப்படேல் நீ என்று அபயம்
தந்து, வரலாறுணர்ந்து, அவன் விடம் தீர்ந்து எழுந்து நிற்கச்
செய்தற்பொருட்டு அருளியது இத்திருப்பதிகம்.
பண்:
இந்தளம்
ப.தொ.எண்:
154 |
|
பதிக
எண்: 18 |
திருச்சிற்றம்பலம்
1655.
|
சடையா
யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே. 1 |
1.
பொ-ரை:
நீர்நிலைகளில் குவளை மலர்கள் மலர்ந்து மணம்
செய்யும் திருமருகலைத் தனக்குரிய ஊராக உடைய பெருமானே! இப்பெண்,
சடையாய் என்றும் விடையாய் என்றும் நீயே எனக்குப் புகலிடம் என்றும்
கூறி அஞ்சி மயங்கிவிழுகின்றாள். உன்னையே நினைந்து புலம்பும் இவள்
மன வருத்தத்தைப் போக்காதிருத்தல் உன்பெருமைக்குத் தக்கதோ?
கு-ரை:
எனும் விழும் செய்யுமென்னும் வாய்பாட்டு முற்றுவினை;
ஈண்டுப் பெண்பாற்குவந்தது. ஆல் என்பன அசைகள். சரண் நீ - நீயே
அடைக்கலம். வெருவா - வெருவி, அஞ்சி வெருவி ஓடித் தழுவ
வெளிப்பட்ட கள்ளக்கம்பனை (சுந்தரர், கச்சியேகம்பம்) அஞ்சுதல் உள்ள
நிகழ்ச்சி. வெருவுதல் வாயொலி. மடை - நீர்
|