பக்கம் எண் :

482

 32. திருவையாறு

பதிக வரலாறு:

     142-வது பதிகத் தலைப்பிற் காண்க. தனியே வரலாறு காணப்பட்டிலது.

திருவிராகம்

பண்; இந்தளம்

ப.தொ.எண:் 168                             பதிக எண்: 32

திருச்சிற்றம்பலம்

1808.



திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்
உருத்திக ழெழிற்கயிலை வெற்பிலுறை தற்கே
விருப்புடைய வற்புதரி ருக்குமிட மேரார்
மருத்திகழ் பொழிற்குலவு வண்டிருவை யாறே. 1
1809.



கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்
இந்திரனு ணர்ந்துபணி யெந்தையிட மெங்கும்
சந்தமலி யுந்தருமி டைந்தபொழில் சார
வந்தவளி நந்தணவு வண்டிருவை யாறே.     2


     1. பொ-ரை: அழகிய மலைமகளோடு மிக்க ஒளிவடிவினராய
சிவபிரான் வெண்மை உருவுடைய அழகிய கயிலைமலையில் உறைவதற்கு
விருப்புடைய மேன்மையர். அவர் இருக்குமிடம் மணம் கமழும் பொழில்
சூழ்ந்ததும் வண்மையாளர் வாழ்வதுமாய திருவையாறாகும்.

     கு-ரை: திரு-அழகு. திகழ்-விளங்குகின்ற. மலைச்சிறுமி-
இமாசலகுமாரியாகிய பார்வதி தேவியார். தேசர்-ஒளிவடிவினர். உரு-
வெண்மையுருவம். எழில்-அழகு. வெற்பு-மலை. உயர்ச்சியிற் பிற
எல்லாவற்றையும் வெல்லுங்காரணத்தாற் பெற்ற பெயர். ஏர்-அழகு.
மரு-மணம். அற்புதர் இருக்குமிடம் திருவையாறு எனக்கூட்டுக. 7, 8
பாக்களில் கூறியபடி. வண்மை-கொடையாளர்; ஈகையை உணர்த்தும்.

     2. பொ-ரை: பற்றுக் கோடாக விளங்கும் சிவபிரானைப்
பொருந்துமாறு புகை இல்லாத விளக்கொளி போன்ற அச்
செம்பொற்சோதியை