பக்கம் எண் :

481

பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்று
வலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே. 11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: கடவுள்ளை-கடவுளை (விரித்தல் விகாரம்). பலம்-பலன்.
வலந்தருதல்-உயிர்க்கு வன்மையை அளித்தல், திருக்கோயிலை
வலம்வருதலுமாம். வினை வாடல்-கருப்பறிதல், ‘கலந்தவர்கருப்பறியல்’
என்ற தொடர் இத் திருத்தலத்தின் பெயர்ப் பொருளைக் குறித்தது.
பறியல்மேய-பறியலில் மேவிய.

திருஞானசம்பந்தர் புராணம்

அப்பதி பணிந்தருந் தமிழ்பு னைந்துதம்
மெய்ப்படு விருப்பொடு மேவு நாள்அரன்
பொற்பதி வலவும்முன் பணிந்துபோந்தனர்
பைப்பணி யவர்கருப் பறிய லூரினில்.

பரமர்தந் திருக்கருப் பறிய லூரினைச்
சிரபுரச் சிறுவர்கை தொழுது செந்தமிழ்
உரை இசை பாடிஅம் மருங்கின் உள்ளவாம்
சுரர்தொழும் பதிகளும் தொழுது பாடினார்.

-சேக்கிழார்.