பக்கம் எண் :

480

நிரந்தர நிரந்திருவர் நேடியறி யாமல்
கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.    9
1806.



அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்
சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்
குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்
கற்றென விருப்பது கருப்பறிய லூரே.    10

1807.

நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்
கலந்தவர் கருப்பறியன் மேயகட வுள்ளைப்


கங்கையை மகிழ்வுடன் முடிமிசை வைத்து, திருமால் பிரமர் தேடி
அறியாதவாறு எப்போதும் அவர்களால் அறியப்பெறாதவனாய்
ஒளித்திருக்கும் சிவபிரான் எழுந்தருளியிருக்கும் ஊர் கருப்பறியலூர்.

     கு-ரை: நிரந்து-வரிசையாக. பரந்து-பரவி. சடைமேல் மிசை-சடையினது
மேலிடத்தில். நிரந்தரம்-எப்போதும். நேடி-தேடி. கரந்தவன்-ஒளித்தவன்.

    10.  பொ-ரை: மறைக்கவேண்டிய உறுப்பை மறையாது
ஆடையின்றித் திரியும் சமணர்களும், அறிவற்ற புத்தர்களும் சொல்லும்
திறன் அறியாதவர்கள். அவர்கள் சொல்லை விடுத்துக் குற்றம் அறியாத
பெருமான் கொகுடிக் கோயிலையே உறுதியானதாகக் கருதி எழுந்தருளிய
ஊர் கருப்பறியலூர்.

     கு-ரை: அற்றம் மறையா அமணர்-மறைக்கவேண்டிய உறுப்புக்களை
மறைக்காத சமணர். ‘அற்றம் மறைப்பதுமுன் பணியே’ என்ற துணர்க.
சொற்றம்-சொல்லும் சொற்கள். சொல்+து+அம். கொகுடி-ஒருவகை முல்லை.
குற்றமறியாத பெருமான்-இத்தலத்துப் பெருமான் திருப் பெயர்.
கற்றென-நிலையாக. கல்+து-கற்று. கல்லைப் போன்று உறுதியானது.

     11. பொ-ரை: நன்மைகளைத்தரும் நீர் வளம் மிக்க புகலிப் பதியில்
தோன்றிய ஞானசம்பந்தன், தன்னோடு உடன் கலந்தவனாய கருப்பறியலில்
மேவிய கடவுளைப்பாடிய பயன்தரும் தமிழ்ச் செய்யுளாகிய
இப்பதிகப்பாடல்கள் பத்தையும் கற்று வன்மை உற்றோர்க்கு வினைகள்
வாடுதல் எளிதாம்.