1803.
|
ஆதியடி
யைப்பணிய வப்பொடு மலர்ச்சேர்
சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்
தீதுசெய வந்தணையு மந்தக னரங்கக்
காதின னிருப்பது கருப்பறிய லூரே. 7 |
1804.
|
வாய்ந்தபுகழ்
விண்ணவரு மண்ணவரு மஞ்சப்
பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்
கேய்ந்தபுய மத்தனையு மிற்றுவிழ மேனாள்
காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 8 |
1905.
|
பரந்தது
நிரந்துவரு பாய்திரைய கங்கை
கரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்து |
7. பொ-ரை:
உலகின் ஆதியாய் விளங்கும் தன்னை வழிபட நீர்,
மலர், ஒளிதரும் விளக்கு, நறுமணப்புகை ஆகியவற்றுடன் கட்டுமலையாய்
உயரமாக அமைந்த ஆலயத்தை அடைந்து வழிபட்ட மார்க்கண்டேயனின்
உயிரைக் கவர வந்தணைந்த காலன் அழியுமாறு உதைத்த சிவபிரான்
எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.
கு-ரை:
அப்பு-சலம். சோதி ஒளி-தூபம். நற்புகை-தூமம். வளர்க்
குவடு புக்கு-வளர்தலையுடைய கருப்பறியலூர்க் கோயில் கட்டுமலை
மேலுள்ளதாதலின் அதனுள் புகுந்து. அரங்க-புடை பெயர, அழிவுமாம்.
காதினன்-ஈண்டு உதைத்தவன் என்னும் பொருட்டு.
8. பொ-ரை:
புகழ் வாய்ந்த தேவர்களும் மக்களும் அஞ்சுமாறு
ஓடிச் சென்று போர் உடற்றும் தொழிலினை உடைய இலங்கை மன்னனுக்கு
அமைந்த இருபது தோள்களும் ஒடிந்து விழுமாறு முன்னாளில்
சினந்தவனாகிய சிவபிரான் வீற்றிருப்பது கருப்பறியலூர்.
கு-ரை:
வாய்ந்த புகழை உடைய விண்ணவர் என்றும் மாறிக் கூட்டிப்
புகழ் வாய்ந்த என்றும் கொள்ளலாம். இற்றுவிழ-ஒடிந்து விழ. காய்ந்தவன்-
சினந்தவன். ஏய்ந்த-பொருந்திய.
9. பொ-ரை:
வரிசையாகப் பரவிப் பெருகி வந்த அலைவீசும் கங்கை
சுவறுமாறு ஒருசடைமேல் ஏற்று அந்நதித் தெய்வமாகிய
|