1801.
|
ஒருத்தியுமை
யோடுமொரு பாகமது வாய
நிருத்தனவ னீதியவ னித்தனெறி யாய
விருத்தனவன் வேதமென வங்கமவை யோதும்
கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே. 5 |
1802.
|
விண்ணவர்கள்
வெற்பரசு பெற்றமகண் மெய்த்தேன்
பண்ணமரு மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவவெரி காலும்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே. 6 |
கு-ரை:
மடம்-அழகு. துறவிகள் உறையும் இடம் பல உடையதால்
மடம் படு மலை என்று இமயத்தினைக் குறித்தல் பொருந்தும். இறைவன்-
அரசன். மறையோன்-மார்க்கண்டேய முனிவன். அணவு -கிட்டிய.
காலன்-யமன். கால-கக்க. கடந்தவன்-கடக்க வுதைத்தவன்.
5. பொ-ரை:
ஒருபாகமாக ஒப்பற்றவளாகிய உமையம்மையோடு
கூடி விளங்கும் கூத்தனும், நீதியின் வடிவானவனும், அழியாதவனும்,
நெறிகாட்டும் முதியோனும், வேதங்கள், ஆறு அங்கங்கள் ஆகியவற்றை
ஓதும் தலைவனும் ஆகிய சிவபிரான் விளங்குவது கருப்பறியலூர்.
கு-ரை:
நிருத்தன்-கூத்தன். நித்தன்-அழியாதவன.் விருத்தன்-
முதியோன். வேதம் அங்கம்-நான் மறையும் ஆறங்கமும். கருத்தவன்-
தலைவன், கருத்துள் இருப்பவன். (தி.6பதி.83பா.5)
6. பொ-ரை:
இமவான் பெற்ற மகளும், தேன்சுவை, பண்ணிசை
ஆகியன போன்ற மொழியினாளும் ஆகிய உமையம்மையை, சிவபிரானது
திருமேனியோடு சேர்ப்பிக்குமாறு விண்ணவர்கள் ஏவ வந்த காமனது
உடல் வெந்தழியுமாறு எரிகாலும் நெற்றிக்கண்ணை உடைய சிவபிரான்
எழுந்தருளியிருப்பது கருப்பறியலூர்.
கு-ரை:
விண்ணவர்களுக்கு, வெற்புக்கு அரசு எனக்கூட்டுக.
எரிகாலும் கண்-நெருப்பைக்கக்கும் கண்; இது பெருமானது வெகுண்ட
நிலையைக் குறித்தது, அணைதல் அம்பிகையது. அணைவித்தல்
ஆண்டவனது. தேன்மொழி, பண்மொழி என்றவாறு.
|