பக்கம் எண் :

477

விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால்
கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.        2
1799.



வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்
போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்ற
நாதனென நள்ளிருண்மு னாடுகுழை தாழும்
காதவ னிருப்பது கருப்பறிய லூரே.          3

1800.



மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்
உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்
தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்
கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.        4


பாம்பு அணைதலைச் செய்யும் கோலம் பூண்டவராய், மும்மதில்களும்
உடைந்து நிலத்தினை அடையுமாறு ஓரம்பால் எய்தழித்தவர் இருப்பது
கருப்பறியலூர்.

     கு-ரை: வண்டு அணைசெய்-வண்டுகள் அணைதலைச்செய்கின்ற. கோலம்-திருக்கோலம், அழகு. கோள்-துன்பம், வலிமையுமா. விண்டு-
(இடம்) விண்டு, நீங்கி, விள்ளல் உற்று.

     3. பொ-ரை: வேதியர்கள் வேதங்களை ஓதுவதோடு வேள்வி
முதலியனவற்றைச் செய்து, காலம் பெற அரும்புகளையும் மலர்களையும்
சாத்தி வழிபடும் தலைவராக நள்ளிருளில் அசைகின்ற குழைதாழ ஆடும்
காதினை உடையவராகிய சிவபிரான் இருப்பது கருப்பறியலூர்.

     கு-ரை: முதலாக-முதலிய பல நற்செயல்களிலும். போதினொடு-
(காலம்பெறப்) பொழுதோடு. போது-மலரும் பருவத்தது. மலர்-பூ. குழைதாழும்
காதவன்-‘குழைக்காதன்’ என்னும் திருப்பெயரைக் குறித்தது.

     4. பொ-ரை: மலையரசனின் மகளாகிய மடப்பம் பொருந்திய
மையொருபாகனும், உடலைவிட்டு உயிர் செல்லும் காலம் வருவதை
அறிந்து தொழுது நின்ற மார்க்கண்டேயன் உயிரைக் கவர வந்த காலனின்
உயிர் நீங்குமாறு தனது ஒரு காலினால் உதைத்தவனும் ஆகிய பெருமான்
வீற்றிருக்கும் தலம் கருப்பறியலூர்.