பதிக
வரலாறு:
திருநாரையூரை
அருந்தமிழ் புனைந்து வழிபட்ட நாயனார் அடியார்களை வானுலகம் ஏற்றக் கற்றவனாகிய சிவபிரான்
வீற்றிருக்குங் கருப்பறியலூரை அடைந்து தொழுது, பாடிப் பரவிய அடியவர் வினையை எளிதில்
ஒழித்திடுமாறு பாடியருளியது இத்தமிழ்க்கிளவி.
திருவிராகம்
பண்:
இந்தளம்
ப. தொ. எண்:
167 பதிக
எண்: 31
திருச்சிற்றம்பலம்
1797.
|
சுற்றமொடு
பற்றவை துயக்கற வறுத்துக்
குற்றமில் குணங்களொடு கூடுமடி யார்கள்
மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே. 1
|
1798.
|
வண்டணைசெய்
கொன்றையது வார்சடைகண்மேலே
கொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும் |
1. பொ-ரை:
சுற்றம், பற்று ஆகியவற்றை முற்றிலும் அறுத்துக்
குற்றமற்ற நல்ல குணங்களோடு கூடி விளங்கும் அடியவர்களைத்
தேவர்கள் வாழும் வானுலகம் ஏற்றலைச் செய்யும் சிவபிரான்
இருக்குமிடம் கருப்பறியலூர்.
கு-ரை:
சுற்றமொடு பற்று அவை- (துணையும்) சுற்றமும் பற்றும்
ஆகியவற்றை. இவ்வாறு கருமூலத்தைப் பறிப்பதால் கருப்பறியலூர்
என்றாயிற்று. கலந்தவர் கருப்பறியல் என ஆசிரியரே இப்பதிக முடிவில்
ஊர்ப்பெயர்ப் பொருளை உணர்த்தியது உணர்க. துயக்கு-அறிவு வேறுபடல்.
சிவபிரானையே அறியும் அறிவு வேறு படாதவாறு சுற்றம் முதலியவற்றை
அறுத்து என்றபடி. மற்று அசை. அடியார்களாகிய அவரை என்க.
வானுலகம்-வீட்டுலகு. கற்றவன்-இயல்பாகவே உணர்ந்த சிவன்.
2. பொ-ரை:
வண்டுகள் அணைதலைச் செய்கின்ற கொன்ய நீண்ட சடைமுடிமீது அணிந்து, துன்பம் செய்யும்
|