பக்கம் எண் :

475

     கு-ரை: கழி-உப்பளம். கரைக்குலவு முத்தம்-கரைமேல் விளங்கும்
முத்து. கழுமலத்து இறை-காழிவேந்தர். அமர்ந்த தமிழ்-விரும்பிப் பாடிய
இப்பதிகம். மருங்கு அற-இருந்த இடமும் தெரியாது ஒழிய. பிறப்பு
ஒருங்குவர்-பிறப்பு ஒழியப் பெறுவர். ஒருங்குவது பிறப்பில் வினை. பிறவி ஒருங்கப் பெறுவது இத்தமிழ் வல்லார் வினை. அப்பிறப்பு ஒருங்கப்பெறுவர் எனற்பாலது பிறவி ஒருங்குவர் எனப்பட்டது. நோயொழிவர், காலொடிவர்
என்பவை போல்வது.

திருஞானசம்பந்தர் புராணம்

விசயமங் கையினிடம் அகன்று மெய்யர்தாள்
அசைவில்வை காவினில் அணைந்து பாடிப்போந்(து)
இசைவளர் ஞானசம் பந்தர் எய்தினார்
திசையுடை ஆடையர் திருப்பு றம்பயம்.

புறம்பயத் திறைவரை வணங்கிப் போற்றிசெய்
திறம்புரி நீர்மையிற் பதிகச் செந்தமிழ்
நிறம்பயில் இசையுடன் பாடி நீடிய
அறந்தரு கொள்கையார் அமர்ந்து மேவினார்.

-சேக்கிழார்.