1795.
|
விடக்கொருவர்
நன்றென விடக்கொருவர் தீதென
உடற்குடை களைந்தவ ருடம்பினை மறைக்கும்
படக்கர்கள் பிடக்குரை படுத்துமை யொர்பாகம்
அடக்கினைபுறம்பய மமர்ந்தவுர வோனே. 10 |
1796.
|
கருங்கழி
பொருந்திரை கரைக்குலவு முத்தம்
தருங்கழு மலத்திறை தமிழ்க்கிழமை ஞானன்
சுரும்பவிழ் புறம்பய மமர்ந்ததமிழ் வல்லார்
பெரும்பிணி மருங்கற வொருங்குவர் பிறப்பே. 11 |
திருச்சிற்றம்பலம்
மானீச்சரத்தாரே
(தி.2பதி.92பா.21), என்பதில், புள் + தன் = புட்டன்
என்று புணர்ந் தமையால், இங்கும் புள் தங்கு என்பனவற்றின் புணர்ச்சி
எனக் கொள்வதில் தடைஇராது.
10. பொ-ரை:
புறம்பயம் அமர்ந்த வலியவனே! ஊன் உண்டல்
நன்றென்று கூறும் தேரர்கள், தீதென்று கூறும் சமணர்கள், உடலில்
உடையின்றித் திரியும் திகம்பரர்கள் உடலைப் போர்த்தித் திரியும்
புத்தர்கள் ஆகியோர் கூறும் பிடகநூல் முதலியவற்றின் உரைகளைக்
கொள்ளாது உமை யம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விளங்குகின்றாய்.
கு-ரை:விடக்கு-ஊன். ஒருவர் நன்றென்னும்-தேரரையும்,
தீதென்னும் சமணரையும் குறித்ததாகும். (உடற்கு உடைகளைந்தவர்,
திகம்பரசைனர்.) படக்கர்கள்-உடையுடுத்தோர். படக்கு-உடை. பிடக்கு
உரை-பிடக நூல்மொழி பிடக்கே உரைசெய்வார் (தி.1பதி.13பா.19).
புத்தர்களுடைய திரிபிடகம்.
11. பொ-ரை:
கரிய உப்பங்கழிகள், பெரிய அலைகளைால்,
விளங்கும் முத்துக்களைததந்து உலவும் கழுமலத்தார்க்குத் தலைவனும்
தமிழுக்கு உரிமை பூண்டவனுமாகிய ஞான சம்பந்தன், வண்டுகள் ஒலி
செய்யும் புறம்பயம் அமர்ந்த பிரானை விரும்பிப் பாடிய இப்பதிகத்தமிழை
வல்லவர்கள் காலங்காலமாக வரும் பெரும் பிணியாகிய பிறப்பு நீங்கப்
பெறுவர்.
|