பக்கம் எண் :

473

வலங்கொள வெழுந்தவ னலங்கவின வஞ்சு
புலங்களை விலங்கினை புறம்பயம் அமர்ந்தோய்.   8
1794.



வடங்கெட நுடங்குண விடந்தவிடை யல்லிக்
கிடந்தவ னிருந்தவ ணளந்துணர லாகார்
தொடர்ந்தவ ருடம்பொடு நிமிர்ந்துடன் வணங்கப்
புடங்கருள்செய் தொன்றினை புறம்பயம மர்ந்தோய். 9


முழங்க அவன் வலிய தலைகளோடு கைகளை அடர்த்து அவன் அஞ்சிப்
போற்ற வாளும், நாளும் அளித்து அவனுக்கு வெற்றி உண்டாக அருள்
புரிந்தவன் நீ. நன்மைகள் உண்டாக ஐந்து புலன்களை வென்றவன் நீ.

     கு-ரை: இலங்கையர்-இலங்கையில் வாழ்ந்தவர்கள், இறைஞ்சு
இறை-வணங்கும் அரசனாகிய இராவணன். விலங்கலில்-கயிலையை
எடுக்குந்திறத்தில். உலம்-திரண்டகல்லை. கெழு-ஒத்த. கவின-அழகுசெய்ய.
அஞ்சு-அஞ்சுகின்ற ஐம்புலன் எனலுமாம்.

     9. பொ-ரை: புறம்பயம் அமர்ந்தவனே! ஆல் இலையில் துயின்ற
திருமாலும் அவனது கொப்பூழாகிய தாமரையில் இருந்துதோன்றிய
பிரமனும் உன்னை அளந்தறிய இயலாத வரா(யி)னார். பின் அவர்கள்
தொடர்ந்து பழைய உருவோடு வணங்க அவர்கட்கு கருடப்புள்,
அன்னப்புள் ஆகியவற்றை ஊர்தியாகக் கொண்டு படைத்தல், காத்தல்
ஆகிய தொழில்களைச் செய்யுமாறு அருள்புரிந்தாய்.

     கு-ரை: வடம்-ஆலமரம். இங்கு ஆலிலையை உணர்த்திற்று. நுடங்கு
உள-அசைவுள்ள, தூங்க என்றபடி. இடந்த-பெயர்ந்த. இடை அல்லி-
கொப்பூழிடையில். பூத்த- (அகவிதழையுடைய) தாமரையொடு, கிடந்தவன்-
திருமால். இருந்தவன்-அம்மலர்மேல் இருந்த பிரமன். புடம்-மறைப்பு. கருள்-இருள். இருள் மறைக்கப் பட்டாற்போல (ஒளிப் பிழம்பாய் இருந்தும்
இருவரும் அடிமுடி காணாது) அறியாமையான் மறைக்கப் பட்டார்கள்.
“கருள்தரு கண்டத்து எம் கயிலையார்” (தி.3பதி.109.பா.4.) புடங்கருள்
செய்து -புள்தங்க அருள் செய்து எனப்பிரித்துக் கருடப்புள், அன்னப் புள்
இரண்டின் மேலும் தங்க அருள்செய்து எனலும் ஆம். பெய- ரெச்சத்து
அகரம் தொக்கது. புள்தங்கு-புட்டங்கு என இரட்டிக் காதது, எதுகை
நோக்கிற்றாம். தி.2பதி.92பா.1 காண்க. ‘புட்டன் பேடையொடாடும்
பூம்புகலூர்த் தொண்டர் போற்றி வட்டஞ்சூழ்ந்தடி பரவும் வர்த்த