|
தனற்படு
சுடர்ச்சடை தனிப்பிறையொ டொன்றப்
புனற்படு கிடக்கையை புறம்பயம் அமர்ந்தோய். 6 |
1792.
|
மறத்துறை
மறுத்தவர் தவத்தடிய ருள்ளம்
அறத்துறை யொறுத்துன தருட்கிழமை பெற்றோர்
திறத்துள திறத்தினை மதித்தகல நின்றும்
புறத்துள திறத்தினை புறம்பயம் அமர்ந்தோய். 7 |
1793.
|
இலங்கைய
ரிறைஞ்சிறை விலங்கலின் முழங்க
உலங்கெழு தடக்கைக ளடர்த்திடலு மஞ்சி |
ராயின் அவர் எத்தொழிலை
மேற்கொண்டவர் ஆயினும் அவர்தம் தீ
வினைகட்குப் பகையாயிருந்து தீர்ப்பவன்நீ. தீக் கொழுந்து போன்ற ஒளி
பொருந்திய சடையில் தனித்த பிறையோடு பொருந்தக் கங்கை கிடக்குமாறு
செய்துள்ளவன், நீ.
கு-ரை:
அனல்படு தடக்கையவர்-செந்தீ வளர்க்கும் கையுடைய
அந்தணர். எரியோம்புஞ் சிறப்பர் (தி.1ப.80பா.2.) வினைப்பகை-வினைக்குப்
பகைவன். தனல்-தணல். புனல்-கங்கை. கிடக்கையை-கிடத்தலை உடையாய்.
7. பொ-ரை:
புறம்பயம் அமர்ந்தோய்! பாவமான செயல்களை
விரும்பாத தவத்தைப்புரியும் அடியவர் உள்ளங்களில் அறநெறிப் பயனையும்
அடைய விரும்பாத வாறு அதனைக் கடிந்து, உன் அருள் உரிமையைப்
பெற்றோர் திறத்தினுக்கு ஏற்ப அருள் வழங்கும் தன்மையனாய் வேறாய்
நின்றும் அருள் புரிபவன் நீ.
கு-ரை:
மறத்துறை-பாபமார்க்கம். மறுத்தவர்-வேண்டாதார்.
தவத்து அடியர்-தவத்தையுடைய அடியவர். அறத்துறை ஒறுத்து-புண்ணிய
மார்க்கத்தையும் கடிந்து. இருவினை யொப்புடைமை குறித்தபடி.
அருட்கிழமை-சிவஞானத்திற்கு உரியராந்தன்மை. திறம்-சரியை முதலிய
நான்கு திறங்கள். சரியையாளர் திறத்திற்குத் தக்கவாறு அருள்செய்யும்
இறைவனது திறத்தைக் குறித்தபடி. மதித்து அகல நின்றும் புறத்து
உளதிறத்தினை என்பது இறைவனது ஒன்றாய் வேறாய் உடனாயிருக்கும்
மூன்று இயல்புகளுள் வேறாய் நிற்பதைக் குறித்தது.
8. பொ-ரை:
புறம்பயம் அமர்ந்தவனே! இலங்கை மக்கள் வணங்கும்
தலைவனாகிய இராவணன் மலையின் கீழ் அகப்பட்டு
|