1789.
|
வளங்கெழு
கடும்புன லொடுஞ்சடை யொடுங்கத்
துளங்கம ரிளம்பிறை சுமந்தது விளங்க
உளங்கொள வளைந்தவர் சுடுஞ்சுடலை நீறு
புளங்கொள விளங்கினை புறம்பயம் அமர்ந்தோய். 4 |
1790.
|
பெரும்பிணி
பிறப்பினொ டிறப்பிலையொர் பாகம்
கரும்பொடு படுஞ்சொலின் மடந்தையை மகிழ்ந்தோய்
சுரும்புண வரும்பவிழ் திருந்தியெழு கொன்றை
விரும்பினை புறம்பயம் அமர்ந்தவிறை யோனே. 5 |
1791.
|
அனற்படு
தடக்கையவ ரெத்தொழில ரேனும்
நினைப்புடை மனத்தவர் வினைப் பகையும் நீயே |
4. பொ-ரை:
புறம்பயம் அமர்ந்த பெருமானே! வளமை
பொருந்தியதாய்க் கடுமையாகப் பெருகி வந்த கங்கையொடு கூடிய
சடையசைய விளங்கும் இளம்பிறையை கலங்கத்தாங்கி மனம் நெகிழ்ந்து
வணங்கும் அடியவர்க்குச் சுடுகாட்டில் விளைந்த நீற்றொடு தோன்றும்
உன் கோலத்தை அறிவிற் காட்டி விளங்குகின்றாய்.
கு-ரை:
புனல்-கங்கை. துளங்கு - அசைவு, முதனிலைத்
தொழிற்பெயர். அளைந்தவர்-கலந்தவர், குழைந்தவருமாம். புலம்-புளம்.
லகரளகரப்போலி, அளமரு-அலமரு என்பது போல. மெய்யினிடம் என்றபடி.
5. பொ-ரை:
புறம்பயம் அமர்ந்த இறைவனே! நீ பெரிதாகப்
பற்றிய நோய், பிறப்பு இறப்பு, இல்லாதவன். கரும்படு சொல்லி என்னும்
பெயருடைய உமையம்மையுடன் மகிழ்ந்தவன். வண்டுகள் தேனுண்ண
அதனால் அழகுற அவிழும் கொன்றைமலர்களை விரும்பியவன்.
கு-ரை:
பிணியும் பிறப்பும் இறப்பும் இல்லாய் என்றபடி. கரும்பொடு
படுஞ்சொலின் மடந்தை-கரும்பன்ன சொல்லம்மை என்னும் அம்பிகையின்
திருப்பெயர். பல திருப்பதிகங்களுள் இறைவனுக்கும் இறைவிக்கும்
அக்காலத்தில் வழங்கிய திருப்பெயர்களைக் குறித்தல் மூவர் இடத்தும்
உண்டு. சுரும்பு-வண்டு.
6. பொ-ரை:
புறம்பயம் அமர்ந்த பெருமானே! தீ வளர்க்கும்
நீண்டகையை உடைய அந்தணர்கள் உன்னை நினையும் மனத்தவ
|