1812.
|
வென்றிமிகு
தாருகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகத மோவ
நின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்
மன்றன்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே. 5 |
1813.
|
பூதமொடு
பேய்கள்பல பாடநட மாடிப்
பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்
கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூ
மாதவி மணங்கமழும் வண்டிருவை யாறே. 6
|
இடம்; குளிர்ந்த சந்தனம்,
அகில் ஆகிய மரங்களை அடித்து வருகின்ற
பொன்னியாற்றின் கரையின்மேல் வந்து பொருந்தியதும் வள்ளன்மையோர்
வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
கு-ரை:
வடத்தின் நிழல்-கல்லாலமரத்தின் நிழல். நால்வர்-சனகாதியர்.
விரித்தவர்-விரித்துரைத்தவர்; (சின்முத்திரைக் குறிப்பால்) சீர்-சிறப்பு,
கனமுமாம். தண்ணின் மலி-குளிர்ச்சியில் மிக்க. சந்துஅகில்-சந்தனமும்
அகிலுமாகிய மரங்கள். பொன்னி-காவிரி, விரித்தவர் இடம் திருவையாறு
என்க.
5.
பொ-ரை: வெற்றிகள் பல பெற்ற தாருகன் உயிர்
போகுமாறு
சினந்து அவனை அழித்த கோபம்மிக்க காளிதேவியின் சினம் அடங்க
அவளோடு நடனமாடிய சிவபிரானது இடம், பெரிய மலர்மணம் நிறையும்
பொழில்களைக் கொண்டுள்ளதும், வள்ளன்மையயோர் வாழ்வதுமான
திருவையாறு ஆகும்.
கு-ரை:
வென்றி-வெற்றி. தாருகன்-ஓர் அசுரன். ஆருயிர்
மடங்க-அரியவுயிர் மடிய. கன்றி-மனங்கன்றி. கதம்-கோபாவேசம். ஓவ -
நீங்க. நடமாடி-பெயர்ச்சொல், நடராசப்பெருமான். மன்றல்-மணம். மேலால்
பொலியும் பொழில் என்றும் நடமாடி இடம் திருவையாறு என்றும் கூட்டுக.
6. பொ-ரை:
பூதங்களும் பேய்களும் பாட நடனமாடி அடிமுதல்
முடிவரை பாம்புகளை அழகுடன் பூண்டு மகளிர் இடும் பலியைக்
கொள்ளும் சிவபிரானது இடம், குருக்கத்திச் செடிகளின் மணம் கமழ்வதும்
வள்ளன்மையுடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.
|