1814.
|
துன்னுகுழன்
மங்கையுமை நங்கைசுளி வெய்தப்
பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கே
என்னசதி யென்றுரைசெ யங்கணனி டஞ்சீர்
மன்னுகொடை யாளர்பயில் வண்டிருவை யாறே. 7 |
1815.
|
இரக்கமில்கு
ணத்தொடுல கெங்குநலி வெம்போர்
அரக்கன்முடி யத்தலை புயத்தொடும டங்கத்
துரக்கவிர லிற்சிறிது வைத்தவரி டஞ்சீர்
வரக்கருணை யாளர்பயில் வண்டிருவை யாறே. 8 |
கு-ரை:
பூதமொடு பேய்கள் பல பாட இறைவன் நடமாடினான். பை-
படம். சர்ப்பாபரணத்தைப் பாதாதிகேசாந்தம் அழகு பெறக் கொண்டவன்.
கோதையர்-தாருகாவனத்து ரிஷிபத்தினிகள். பரன் - மேலானவன், மாதவி-
குருக்கத்தி, பரன் இடம் திருவையாறு என்க.
7. பொ-ரை:
செறிந்த கூந்தலையுடைய உமைமங்கை சினம்
கொள்ளுமாறு பின்னும் ஒரு தவத்தைச் செய்ய, உமையே! நீ சினம்
கொள்ளக் காரணம் யாதென வினவி, அவளை மணந்துறையும் கருணை
நிரம்பிய கண்களை உடைய சிவபிரானது இடம், வள்ளன்மை நிரம்பிய
கொடையாளர் வாழும் திருவையாறு ஆகும்.
கு-ரை:
துன்னு-நெருங்கிய. குழல்-கூந்தல். மங்கையுமை
நங்கை-உமாதேவியார். சுளிவு எய்த-கோபம் அடைய. பின் ஒரு தவம்
செய்து-பின்னரும் ஒரு தவத்தைச் செய்து. உழல்-உழலுதற்குக் காரணமான.
பிஞ்ஞகன்-சடைமுடி உடையவன். அங்கே-தவஞ்செய்த இமயமலைச்சாரலில்.
என்ன சதி என்று உரைசெய் அங்கணன்-சதி என்ன காரணத்தால் நீ தவம்
செய்கின்றாய் என்று வினாவியவன். சதி-பதிவிரதை. அங்கணன்-
கருணைக்கண்ணன். சீர் மன்னு கொடையாளர்-சிறப்பு நிலை பெற்ற
கொடையை ஆள்பவர்.
8. பொ-ரை:
இரக்கமற்ற குணத்தோடு உலகெங்கும் வாழ்வோரை
நலிவு செய்யும் கொடிய போரைச் செய்துவந்த இராவணனின் தலைகள்,
தோள்கள் ஆகியன அழியுமாறு கால்விரலால் செற்ற சிவபிரானது இடம்
புகழ் உண்டாகுமாறு பொருள் வழங்கும் கருணையாளர் வாழும்
திருவையாறு ஆகும்.
கு-ரை:
இல்-இல்லாத. நலி-வருந்துகின்ற. அரக்கன்-
|