பக்கம் எண் :

486

1816.



பருத்துருவ தாகிவிண் அடைந்தவனொர் பன்றிப்
பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றும்
கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவனி டங்கார்
வருத்துவகை தீர்கொள்பொழில் வண்டிருவை யாறே. 9


இராவணன். முடியத்தலை புயத்தொடும் அடங்க-இருபது தோள்களொடும்
பத்துத் தலைகளும் நெரிந்தழிய. துரக்க-செலுத்த. (அழுத்த என்றவாறு)
சீரும் வரமும் கருணையும் ஆள்பவர்.

     9. பொ-ரை: பருந்து உருவமாய் விண்ணிற்சென்று தேடிய பிரமன்,
பெரிய பன்றி உருவமாய் நிலத்தை அகழ்ந்து சென்று அடிமுடி தேடிய
திருமால் ஆகியோர் மனங்கட்கு எட்டாதவாறு ஓங்கி உயர்ந்து நின்ற
சிவபிரானது இடம், வெம்மையைப் போக்கும் பொழில்கள் சூழ்ந்ததும்
வள்ளன்மை உடையோர் வாழ்வதுமான திருவையாறு ஆகும்.

     கு-ரை: பருத்து உரு அது-பருந்து உருவம். வலித்தல் விகாரம்.
விண்ணடைந்தவன்-பிரமதேவன். பெருத்த பன்றி உருவதாய்-பெரிய பன்றி
வடிவமாய். பெயரெச்சத்து அகரம், தொக்கது உலகிடந்தவன்-உலகங்களைப்
பேர்த்தவன். திருமால், பிரமன் ஒரு கற்பத்தில் கழுகாகி முடிதேடினான்
என்னும் உண்மை இதில் குறிக்கப்பட்டது. “பூவார் பொற்றவிசின் மிசை
இருந்தவனும், பூந்துழாய் புனைந்த மாலும், ஓவாது கழுகு ஏனமாய் உயர்ந்து
ஆழ்ந்து உற நாடி உண்மை காணாத், தேவாரும் திருவுருவன்” (தி.1 பதி.131.
பா.9) என்று முன்னும் அருளியது உணர்க. “ஏனங்கழுகானவருன்னை
முனென்கொல் வானந்தலமண்டியும் கண்டிலாவாறே” என்றது காண்க. (தி.2.
ப.37. பா.9) “புண்டரிகத்துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய், அண்டரண்டம்
ஊடுருவ ஆங்கோடிப், பண்டொருநாள், காணான் இழியக் கனக
முடிகவித்துக் கோணாது நின்ற குறி போற்றி” (தி.11, நக்கீரர்
போற்றித்திருக்கலி வெண்பா 4, 5 கண்ணிகள்) கருத்து உரு ஒணாவகை-
அவர்கள் கருத்தில் இறைவன் உருவம் (அடிமுடி) ஒன்றாவகை, ஒன்றாமை-
ஒண்ணாமை மருஉ. கார்வருத்து வகை தீர்கொள் பொழில்-வானோங்கி
வளர்தலால் ஆங்குச் செல்லும் முகிலைத் தடுத்து வருத்தும் வகையால்,
வெயிலால் காய்ந்த வெப்பத்தை மழையால் தீர்தலைக்கொள்ளும் சோலை.
காரை வருவித்தலால் எனலுமாம். வருத்தல் (-வருவித்தல்) என்பது
வழக்கிலும் உண்டு. நிமிர்ந்தவன் இடம் திருவையாறு எனக்கூட்டுக.