1863.
|
சங்கந்
தரளம் மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
மங்கை யுமைபா கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே லடைவித் தகருத்தே. 2
|
1864.
|
குரவங்
குருக்கத் திகள்புன் னைகண்ஞாழல்
மருவும் பொழி்ல்சூழ் மறைக் காட் டுறைமைந்தா
சிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ டடைவித் தலழகே. 3
|
செவ்வனிறயோ இறைபயத்தலோ
செய்க என்பார், இறைவைத் தருள்
செய்க என்றருளினார். எனக்கு அருள்செய்க என்று இவ்வாறு வேண்டுவது
ஆசிரியர் திருவாக்கில் வேறு எங்கும் காண்டல் அரிதாகும். இதற்குப் பிறர்
உரைத்தது பொருந்துமோ?
2.
பொ-ரை:
சங்குகளையும் முத்துக்களையும் அலைக்கரங்களால்
கரையில் எறியும் மரக்கலங்களை உடைய கடல் சூழ்ந்த மறைக்காட்டில்
உறையும் மைந்தனே! உமைமங்கை ஒருபாகமாக இருக்க நீ கங்கையைச்
சடைமீது கொண்டுள்ள கருத்தின் காரணம் யாதோ?
கு-ரை:
சங்கம் - சங்குகள். தரளம் - முத்துக்கள். எற்றும் -
(அலைகள்) எறியும். வங்கம்-மரக்கலம். உமையோடு கூடியிருந்தும்
கங்கையைச் சடைமேல் அடையச் செய்ததன் கருத்தை வினாவியது.
3.
பொ-ரை:
குரா, குருக்கத்தி, புன்னை, புலிநகக்கொன்றை
ஆகியன மருவிய பொழில் சூழ்ந்த மறைக்காட்டில் உறையும் மைந்தனே!
தலைமாலையும் மலர்மாலையும் திகழும் உன் செஞ்சடைமேல் தம்முள்
பகை உடைய பாம்பையும் மதியையும் உடன் வைத்துள்ளதற்குக் காரணம்
யாதோ?
கு-ரை:
குரவம் - குராமரம். குருக்கத்தி - மாதவி
ஞாழல்-புலிநகக்கொன்றை. கோங்குமாம். சிரம் - தலை, தலைமாலை.
தலைமாலை தலைக்கணிந்து தலையாலே பலிதேருந்தலைவன் இது
பாம்பைப் பிறையொடு சூடிய அழகை வினாவியது. வினாச்சொல்லை
வருவித்துரைக்க. திங்களை பகைமை கருதிவிழுங்கும் அழகு என்று
குறித்தருளினார்.
|