பக்கம் எண் :

513

37. திருமறைக்காடு

பதிக வரலாறு:

     மேதினிமேற் பொய்மிகுத்து, ஆதி அருமறை வழக்கமும்
அரனடியார்பாற் பூதிசாதன விளக்கமும் முறையே அருகிப் போற்றல்பெறாது
ஒழியக்கண்டு, இடர் உழந்த சிவபாத இருதயர் புரிந்த தவப்பயனாகப்,
பரசமயம் நிராகரித்து நீறாக்கும் பொருட்டுத் திருவவதாரஞ்செய்த
முதல்மறைப் பிள்ளையார், திருமறைக்காட்டை அடைந்தார். அங்கு, முன்பே
சென்ற திருநாவுக்கரசு நாயனாரைக் கூடினார். திறப்பும் அடைப்பும்
இல்லாதிருந்த திருக்கோயிற் கதவங்களைத் திறக்கவும் மூடவும் முறையே
இருவரும் பாடியருளினர். அவதார காரணங்களிரண்டனுள் ஒன்றான
வேதநெறி தழைத்தோங்குதலை வேதாரணியத்துள் தொடங்கி நிறுவியருளிய
உண்மையை உணர்த்துவது இத்திருப்பதிகம்.

பண்: இந்தளம்

ப.தொ.எண்: 173 பதிக எண்: 37

திருச்சிற்றம்பலம்

1862.



சதுரம் மறைதான் றுதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.   1


     1. பொ-ரை: இனிய பொழில்கள் சூழ்ந்த திருமறைக்காட்டில்
வேதங்கள் நான்கும் துதி செய்து வணங்க வீற்றிருக்கும் வலியோனே!
உன் திருக்கோயில் கதவுகள் முன் உள்ளவாறே திருக்காப்புக் கொள்ளும்
கருத்தோடு வினவிய இக்கேள்விகளுக்கு எனக்கு நல்லவண்ணம் விடை
அருள்வாயாக.

     கு-ரை: சதுரம் மறை-நால்வேதம். (மகரவொற்று விரித்தல்) மதுரம்-
தேனினிமை. இறை-விடை. மறை துதிசெய்து வணங்கும் காரணத்தால்
மறைக்காடு என்றான உண்மையை உணர்த்தியருளியவாறறிக. பின்வருவன
வினாக்களாதலின், அவற்றிற்குச்