திருஞானசம்பந்தர்
புராணம்
தேவர்பிரான்
அமர்ந்ததிரு இரும்பூளை சென்றெய்தக்
காவணநீள் தோரணங்கள் நாட்டியுடன் களிசிறப்பப்
பூவண மா லைகள்நாற்றி பூரணபொற் குடம்நிறைத்தங்
கியவர்களும் போற்றிசைப்பத் திருத்தொண்டர் எதிர்கொண்டார்.
வண்டமிழின் மொழிவிரகர் மணிமுத்தின் சிவிகையினைத்
தொண்டர்குழாத் தெதிர்இழிந்தங் கவர்தொழத்தா முந்தொழுதே
அண்டர்பிரான் கோயிலினை அணைந்திறைஞ்சி முன்நின்று
பண்டரும்இன் னிசைப்பதிகம் பரம்பொருளைப் பாடுவார்.
நிகரிலா
மேருவரை அணுவாக நீண்டானை
நுகர்கின்ற தொண்டர்தமக் கமுதாகி நொய்யானைத்
தகவொன்ற அடியார்கள் தமைவினவித் தமிழ்விரகர்
பகர்கின்ற அருமறையின் பொருள்விரியப் பாடினார்.
-சேக்கிழார்.
|