பக்கம் எண் :

511

1859.



துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர்
கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி
இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.        9
1860.



துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர்
பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி
இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.         10
1861.

எந்தை யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன்


யோடும் இருக்கையை உடைய என்க. உரம்-வலிமை. அருள்-நாளும்
வாளும் பிறவும் நல்கிய கருணை.

     9. பொ-ரை: துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல்
போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான
இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால்,
பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ?
சொல்வீராக.

     கு-ரை: ஆயின-வினையாலணையும் பெயர். துயர்-பிறவி, மறதி
முதலியவை. கயல்-மீன்விசேடம். ‘அங்கயற்கண்ணியார்’ இருவர்-அரி
அயன். மொய்ம்பு-வன்மை, ஆற்றல்.

     10. பொ-ரை: திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும்
தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதி
தேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக்
கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமணபௌத்த
மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக.

     கு-ரை: துணை-ஒப்பு. பணை-பருமை. இணை-ஈடு, ஒப்பு.
அணைவு இல்-அணை(ந்து வழிபடு)தல் இல்லாத. சமண் சாக்கியம்-
சமணரும் சாக்கியரும் (ஆகிய புறப்புறச் சமயம்) உம்மைத்தொகை.

     11. பொ-ரை: எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக்
கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வதங்களை உணர்ந்த