1857.
|
தோடார்
மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர்
சேடார் குழற்சே யிழையோ டுடனாகி
ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காடார் கடுவே டுவனா னகருத்தே. 6 |
* * * * * * * * * * * * 7
|
1858.
|
ஒருக்கும்
மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர்
பருக்கை மதவே ழமுரித் துமையோடும்
இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன்
அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே. 8
|
6.
பொ-ரை: இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும்
தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும்
கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில்
உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ?
சொல்வீராக.
கு-ரை:
தோடு-இதழ், தொகுதியுமாம். தூய்-தூவி. சேடு-திரட்சி.
சேயிழை-செய்ய பூண்களையுடைய அம்பிகை. (அன்மொழித்தொகை)
ஈடு-பெருமை, சமமுமாம். காடு ஆர்-காட்டில் பொருந்திய. வேடுவன்-
(அருச்சுனனோடு போர்செய்த) வேடன். ஏவார்சிலை எயினன் உருவாகி
எழில்விசயற்கு ஓவாத இன்னருள் செய்த எம் ஒருவன் (தி.1 பதி.12 பா.6)
7.
* * * * * * * *
8. பொ-ரை:
ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர்
கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே! நீண்ட கையையும் மதத்தையும்
உடைய யானையை உரித்து உமையம்மையோடு இரும்பூளையை இடமாகக்
கொண்ட ஈசன் இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது
ஏனோ? சொல்வீராக.
கு-ரை:
ஒருக்கும் மனத்து-இறைவன் திருவடியே, ஒன்றியிருந்து
உணர்ந்து உணர்ந்து, மற்றெல்லாப் பற்றுக்களும் ஒருங்கச் செய்த
மனத்தினையுடைய. அன்பர் உள்ளீர்-அன்பர் கூட்டத்தைச் சார்ந்தவரே!
பருக்கை-பரியதாகிய துதிக்கையையுடைய. உமை
|