|
இச்சித்
திரும்பூ ளையிடங் கொண்டவீசன்
உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. 4 |
1856.
|
சுற்றார்ந்
தடியே தொழுவீ ரிதுசொல்லீர்
நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி
எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
புற்றா டரவோ டென்புபூண் டபொருளே. 5 |
வல்லிக்கொடியுடன்
கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று
உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக.
கு-ரை:
நச்சி-விரும்பி. தொழுவீர்கள் (விளி). கச்சி-காஞ்சிபுரம்.
திருக்கச்சி. பொலி-திருக்கோயில்கொண்டு விளங்குகின்ற. காமக்கொடி-
காமாட்சி தேவியாராகிய வல்லி, இச்சித்து-விரும்பி, ஊண்பொருட்டுப்
பலிகொண்டு உழல்வது ஏன் சொல்லீர் என்றபடி.
5.
பொ-ரை: சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே
தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய
உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள
ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப்
பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக.
கு-ரை:
சுற்று ஆர்ந்து-சூழ்ந்து நிறைந்து. அடியார் சுற்றம் நிறைந்து
என்றுமாம். நல்தாழ்குழல்-அழகிய தொங்குகின்ற கூந்தலையுடைய. நங்கை-
தேவியார்க்கெல்லாந் தலைவி. புற்று-ஆடு அரவு-புற்றிலுறைவதும் ஆடுவதும்
ஆகிய பாம்பு என்றவாறு. முறையே இடமும் தொழிலும் பற்றிய
அடைமொழிகள்.
என்பு-எலும்புமாலை.
பொருள்-பயன். பொருள் என்றே சொல்லீர்
என்று இயைத்துரைக்க. எற்றே-எத்தன்மையதோ? எல் (இகழ்ச்சி)
தேய-தேய்ந்த, இல்லாத எனலும் ஆம். எல்து-ஒளியுடையது. ஏய்-
பொருந்திய எனலும் அமையும்.
|