|
எழிலா
ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன்
கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே. 2 |
1854.
|
அன்பா
லடிகை தொழுவீ ரறியீரே
மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி
இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன்
பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 3 |
1855.
|
நச்சித்
தொழுவீர் கணமக் கிதுசொல்லீர்
கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி |
வளையல்களையும் உடைய
அம்மையோடு உடனாய் அழகிய
இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால்
கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
கு-ரை:
தொழல் ஆர்கழலே-தொழுதற்குப் பொருந்திய திருவடி.
தலைவைத்தது திருவடியை வணங்கற்கேயாதலின், அத்தலை தாழ்த்துதல்
முதலிய தொழலுக்குப் பொருந்தியதும் திருவடி அல்லாது வேறில்லை.
தொழு தொண்டர்கள்-வினைத் தொகை. குழல் ஆர்-மொழி நமக்கு
வேய்ங் குழலிசையின்பம் போல இறைவனது செவிக்கு இன்பஞ்செய்யும்
மொழி.குழல் வாய்மொழியம்மை என்பது அம்பிகையின் திருப்பெயர்களுள்
ஒன்று. கோல்-திரட்சி. வளை-வளையல். மொழியும் வளையும் உடையாள்
என்க. எழில்-அழகு. கழல்-திருவடிக்கு ஆகு பெயர். தொண்டர்கள் (விளி)
கருத்து சொல்லீர் என்க.
3.
பொ-ரை: அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால்
தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய
உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக்
கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை
வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ!
கு-ரை:
அன்பு-பத்தி. அடி-திருவடி. தொழுவீர்-விளி.
அறியீரே-அறிவீர்களோ? அறிவீர் என்று முன்பின் உள்ளவாறுங்
கொள்ளலாம். மின்போல் மருங்குல்-மின்னிடை. புனல்-கங்கைநீர்.
4.
பொ-ரை: சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே!
காஞ்சி மாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய
|