பதிக
வரலாறு:
ஆளுடைய
பிள்ளையார் திருவாறை வடதளியினின்றும்
எப்பொருளுமாய் நின்ற இறைவரது இரும்பூளை என்னும் தலத்தை எய்தித்
தொண்டர்தொழ அண்டர்பிரான் கோயிலையடைந்து, இறைஞ்சி,
அடியார்களை வினவியவாற்றால் அருமறையின் பொருள் விரியப் பாடியது
இத்திருப்பதிகம்.
வினாவுரை
பண்:
இந்தளம்
ப.தொ.எண்:
172 |
|
பதிக
எண்: 36 |
திருச்சிற்றம்பலம்
1852.
|
சீரார்
கழலே தொழுவீ ரிதுசெப்பீர்
வாரார் முலைமங் கையொடும் முடனாகி
ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன்
காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே. 1 |
1853.
|
தொழலார்
கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்
குழலார் மொழிக்கோல் வளையோடு டனாகி |
1. பொ-ரை:
சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும்
அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும்
உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய
கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ?
இதனைச் சொல்வீராக.
கு-ரை:
சீர் ஆர் கழலே-எல்லா உலகங்களையும் அளித்த சீர்
நிறைந்த திருவருளையே. தொழுவீர்-தொழுகின்றவரே! கருத்தாகிய இது
செப்பீர் என்க. மேலும் இவ்வாறே இயைத்துப் பொருள்கொள்க. ஏர்-அழகு.
கார்-கருமை. மேகமுமாம். கடல்-பாற்கடல். நஞ்சு அமுது-நஞ்சமாகிய
அமுதம், நஞ்சத்தை அமுதாக என்று ஆக்கச் சொல் வருவித்தும்
முடிக்கலாம்.
2. பொ-ரை:
வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும்
தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட
|