பக்கம் எண் :

506

சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.      11

                        திருச்சிற்றம்பலம்


     கு-ரை: நல்லார் - ஞானியர். ‘கற்றவர்கள் பணிந்தேத்தும் கழு
மலத்துள்ளீசன்றன் கழல் மேல் நல்லோர் நற்றுணையாம் பெருந்தன்மை’
(129-11). வானவர்-வீட்டுலகடைந்தோர். உறைவார்-வாழ்வார்.

திருஞானசம்பந்தர் புராணம்

மருங்குளநற் பதிகள்பல பணிந்துமா நதிக்கரைபோய்க்
குரங்காடு துறையணைந்து குழகனார் குரைகழல்கள்
பெருங்காத லிற் பணிந்து பேணியஇன் னிசைபெருக
அருங்கலைநூல் திருப்பதிகம் அருள்செய்து பரவினார்.

                               -சேக்கிழார்.

தேவாரம் ஓதுவோர் பெருமை

தனமனர் சிரபுர நகர்இறை
     தமிழ்விர கனதுஉரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவர்எழில்
     மலர்மகள் கலைமகள் கயமகள்
இனமலி புகழ்மகள் இசைதர
     இருநில னிடைஇனி தமர்வரே.

          -(தி. 1. பதி.20. பா.11) திருஞானசம்பந்தர்.