பக்கம் எண் :

505

செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே.       9
1850.



துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே.        10
1851.

நல்லார் பயில்காழி யுண்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல்


பவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த
கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக
உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.

     கு-ரை: படி-தன்மை, உருவம். பண்டங்கன்- பாண்டரங்கம்
என்னும் கூத்தை ஆடுபவன். ‘பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே’
(தி.6 பதி.37.பா.63) செடியார்தலை - பிரமகபாலம். செங்கண்
வெள்ளேற்றின் கொடியான்-சினக்குறிப்பை உணர்த்தும் சிவந்த
கண்ணை உடைய வெள்ளை விடையை எழுதிய கொடியை
உடையவன் (பா.5).

     10. பொ-ரை: துவராடை அணிந்த புத்தர்களும், வேட மல்லாத
வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐய உரைகளை
விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள்,
பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில்
சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.

     கு-ரை: கையர்-கீழ்மக்கள். கவர்வாய்மொழி-கவர்த்த (ஐயத்தை
விளைக்கும்) வாய்ப்பேச்சு. நவை-சிதைவு என்னும் பொருட்டாய் நின்றது.
குவை-குவியல்.

     11. பொ-ரை: நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞான
சம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய
குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர்,
வானவரோடு உறைவர்.