பக்கம் எண் :

504

1847.



பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும்
அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும்
குழகன் னகர்போல் குரங்காடு துறையே.      7
1848.



வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலா னெரித்திட் டவனூராம்
கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.    8
1849.

நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண்டங்கனின் றெரியாடி


     7. பொ-ரை: பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன்.
பார்வதி தேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள்
முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை
வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது
நகர் குரங்காடுதுறை.

     கு-ரை: பழகும் வினை-பிறவிதொறும் உயிரை இடைவிடாது
தொடர்ந்து பழகும் பழவினை. பார்ப்பதி-பார்வதி தேவியார். முழவம்,
குழல், மொந்தை என்னும் இசைக் கருவிகள் முழங்க எரியில் ஆடும்
அழகன் என்க. முழங்கு எரி-வினைத் தொகையுமாம். அயில்-கூர்மை.
மூவிலைவேல் - திரிசூலம். வலன்-வலக்கையில். குழகன்-இளைஞன்.

     8. பொ-ரை: கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த
இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய
சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய
கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடுதுறையாகும்.

     கு-ரை: ஒல்க-தளர, சுருங்க. கோலம்-அழகு. நெரித்திட்டவன்-
நெரியச் செய்தவன். குரை-ஒலி.

     9. பொ-ரை: திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத
இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடு