பக்கம் எண் :

503

1845.



நீறார் தருமே னியனெற் றியொர்கண்ணன்
ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி
ஆறார் சடையந் தணனா யிழையாளோர்
கூறா னகர்போல் குரங்கா டுதுறையே.        5
1846.



நளிரும் மலர்க்கொன் றையுநா றுகரந்தைத் துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும்
புனல்சூழ் குரங்கா டுதுறையே.              6


     கு-ரை:விழிக்கும் நுதல் மேல்-தீக்கண் திறக்கும் திருநுதலின்
மேலிடத்தில் (சென்னியின் முற்பக்கத்தில் என்றபடி) ‘பிறை நுதல்
வண்ணம் ஆகின்று’ (புறம்-கடவுள்) சூடி, ஆடித் தேர்ந்தவன் ஊர்
குரங்காடுதுறை என்க. தெழிக்கும்-ஒலிக்கும். பழிக்கும் பரிசே-
பலியேற்கின்றானென்று பழிக்குந் தன்மையிலே. பொன் கொழிக்கும்
புனல்-பொன்னியாகிய காவிரி நீர்.

     5. பொ-ரை: நீறு பூசிய மேனியன். நெற்றிக் கண்ணன்.
விடைக்கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று
ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன்.
உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.

     கு-ரை:நீறு ஆர்தரு மேனியன்-திருவெண்ணீற்றினை நிறையப்
பூசிய திருமேனியன்; ஏறு ஆர் கொடி - (பா.9) விடைக்கொடி.
(ஆர்தல்-பொருந்துதல்) ஈண்டு எரி-வினைத்தொகை; திரண்ட தீ.
ஆறு-கங்கை ஆயிழையாள் ஓர் கூறான்-மங்கை பங்கன்.

     6. பொ-ரை: குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத்
தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும்
அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான்
மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.

     கு-ரை: நளிரும்-குளிரும். கரந்தைத்துளிர்-கரந்தை என்னும் மரத்தின்
தளிர். சுலவி-சுற்றி. மிளிரும்-விளங்கும். கீழ் மேலாகும் எனலுமாம்.